Category: உலக செய்திகள்
-
கவலைக்கிடமான நிலையில் போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசடமடைந்துள்ளதாக வத்திகான் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்டகால ஆஸ்துமா சுவாச நெருக்கடியைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் சிக்கலான நுரையீரல் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இரத்த சோகையுடன் தொடர்புடைய ஒரு நிலையை சோதனைகள் சுட்டிக்காட்டிய பின்னர் அவருக்கு இரத்தமாற்றமும் அளிக்கப்பட்டதாக வத்திக்கான் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த புதுப்பிப்பை…
-
பொதுமக்களுக்கு எச்சரிக்கை இஸ்ரேல் பேருந்துகளில் வெடித்த குண்டுகள்.
இஸ்ரேலின் டெல் அவிவின் தெற்கு புறநகர்ப் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடித்ததாக இஸ்ரேலிய பொலிசார் தெரிவித்தனர். எனினும் குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் பொலிஸார் கூறியுள்ளதுடன், பேட் யாமில் பல்வேறு இடங்களில் பல பேருந்துகள் வெடித்ததாக பல தகவல்கள் வந்துள்ளன என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, சந்தேக நபர்களைத் தேடும்…
-
FBI பணிப்பாளராக இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI பணிப்பாளராக காஷ் படேல், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையானதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு திகழ்கிறது. இந்த அமைப்பு பல நாடுகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. தற்போது இதன் பணிப்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை உத்தியோகப்பூர்வமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
-
மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு.
மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த 20 வயது இளம்பெண் உயிரிழந்ததாக பீல் பிராந்திய போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் ஊடகமொன்றினால் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பெண் சாலையை கடக்கும்போது, வேகமாக வந்த SUV வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை மேற்கோண்ட நபர் வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார். விபத்துக்குள்ளான இளம்பெண் படுகாயங்களுடன் அவசர மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். சில காலம் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், சிகிச்சை…
-
ஆளில்லா விமானங்களை உக்ரைனில் ஏவிய ரஷ்யா!
யுக்ரைனின் வடகிழக்கு பகுதியிலுள்ள உட்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா 161 ஆளில்லா விமானங்களை ஏவியதாக யுக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலால் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணை தாக்குதலால் எரிவாயு உற்பத்தி மையங்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு வலுசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ (German Galushchenko) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த நாட்களில் மாத்திரம் ரஷ்யா 122 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் யுக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் 4 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கின்றது.
ஹமாஸ் போராளிகள் நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளனர். அவர்களில் ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இளம் குழந்தைகள், கிஃபிர் மற்றும் ஏரியல் ஆகியோர் அடங்குவர். தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்கு வெளியே உள்ள ஒப்படைப்பு இடத்தில், ஹமாஸ் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த முகமூடி அணிந்த மற்றும் ஆயுதமேந்திய போராளிகளின் கணிசமான குழு உட்பட, ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். இறந்த நான்கு பணயக்கைதிகளின் எச்சங்களை சுமந்து சென்ற சவப்பெட்டிகள் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக…
-
பிலிப்பைன்ஸில் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ கொடுத்தால் சன்மானம்!
பிலிப்பைன்ஸில் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ கொடுத்தால் சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு 2025 ஆம் ஆண்டில் மட்டும் பிலிப்பைன்ஸில் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் டெங்கு பாதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டெங்கு வரவழைக்கும் கொசுக்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டெங்கு கொசுக்களை ஒழிக்கவும் பிலிப்பைன்ஸ் அரசு புதிய…
-
உக்ரைன் மீதான யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம்
ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே ஜனாதிபதியே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் , மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். சவுதிஅரேபியாவில், அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். அதேவேளை ரஷ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை…
-
விசாரணையை துவக்கியுள்ள இந்தியா : கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம்
திரைப்பட பாணியில் கனடா விமான நிலையத்தில் 6,600 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்தியா விசாரணயைத் துவக்கியுள்ளது. 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது ’பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அந்த பார்சல்களில் 6,600 தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. அவற்றின் எடை சுமார் 400 கிலோகிராம். கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.…
-
பாப்பரசர் பிரான்ஸிஸ் இற்கு நிமோனியா தொற்று
கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்ஸிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான பாப்பரசர் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் கடந்த (14) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாப்பரசருக்கு நேற்றையதினம் மேற்கொண்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. பரிசோதனைகள், நெஞ்சு பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மற்றும் மருத்துவ அறிக்கைகள் நோய் ஆபத்தானது என்பதை காட்டுக்கின்றது. எனினும் போப்…