Category: உலக செய்திகள்

  • சுவிஸில் கத்திக்குத்து தாக்குதல்

    சுவிஸில் கத்திக்குத்து தாக்குதல்

    சுவிஸ்லாந்திலுள்ள சூரிச்சில் உள்ள லாகர்ஸ்ட்ராஸில் உள்ள வணிக வளாகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் கைத்துக்குத்துக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகளில் குறிப்பிடப்பிட்டுள்ளது. குறித்தி தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த சம்பவத்தை 28 வயது நபர் 41 வயதுடைய ஒரு வாடிக்கையாளரை கத்தியால் குத்தினார். வாடிக்கையாளர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சந்தேகத்திற்குரிய குற்றவாளி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதலாளி ஆஸ்ரேலியா நாட்டைச்…

  • ரஷ்யா ; யுக்ரேன் மீது ஏவுகணை தாக்குதல்

    ரஷ்யா ; யுக்ரேன் மீது ஏவுகணை தாக்குதல்

    ரஷ்யா யுக்ரேன் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்காக 267 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அதில் 138 ஏவுகணைகள் யுக்ரேன் விமானப் படையினரால் இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலினால் யுக்ரேனில் பல பகுதிகளில் பாரிய அளவிலான தீ விபத்துக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் மூவர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கார்கிவ்,கிவ் உள்ளிட்ட சுமார் 13 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக யுக்ரேன் நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.…

  • பூமியில் உள்ளோரின் முகங்களை விண்வெளியில் இருந்து அடையாளம் காணும் கமரா

    பூமியில் உள்ளோரின் முகங்களை விண்வெளியில் இருந்து அடையாளம் காணும் கமரா

    விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் அதி திறன் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய கண்காணிப்பு திறன்களை மறுவரையறை செய்யக்கூடிய சக்திவாய்ந்த லேசர் அமைப்புடன் சீன விஞ்ஞானிகள் ஆப்டிகல் இமேஜிங் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேம்பட்ட இந்த இமேஜிங் சாதனம் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் இருந்து மில்லிமீட்டர் அளவிலான விவரங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இது உளவுத்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும்.

  • இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் விடுதலையை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவிப்பு

    இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் விடுதலையை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவிப்பு

    இஸ்ரேலிய சிறைச்சாலையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 600 பேரை விடுதலை செய்வதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் உட்பட ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பணயக்கைதிகளை விடுதலை செய்யும்போது ஹமாஸ் அவர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறான நிகழ்வுகள்இல்லாமல் அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலை இடம்பெறும்வரை பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யப்போவதில்லை…

  • அமெரிக்காவில் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா நிறுவனம்

    அமெரிக்காவில் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா நிறுவனம்

    அமெரிக்காவில் சுமார் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. பவர் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு கார்களை திருப்ப பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த வாகனங்களை இயக்குவதில் சிரமமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் முறைப்பாடு அளித்த நிலையில் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அமெரிக்காவில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது.

    அமெரிக்காவில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது.

    அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தட்டம்மை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மறுத்தமையே நோய் பரவுவதற்கு காரணமென அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  • சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து

    சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து

    இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த 30க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்குண்டு இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த நாகர்கர்னூல் மாவட்டத்தின் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீசைலம் நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள சுரங்கப்பாதையில் வழமைபோல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தின் ஒரு பகுதி கூரை இடிந்து…

  • பேரழிவுக்கான அறிகுறியாக கரை ஒதுங்கிய அரிய வகை மீனினம்

    பேரழிவுக்கான அறிகுறியாக கரை ஒதுங்கிய அரிய வகை மீனினம்

    மெக்சிகோ கடல் பகுதியில் ‘டூம்ஸ் டே’ என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ (Oar) மீன்கள் கரை ஒதுங்கியுள்ளமை மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள பாஜா கலிபோர்னியா சுரின் எனும் ஆழமற்ற நீர்நிலைகளின் கரையில், ஆழ் கடலில் மட்டுமே காணப்படும் நீள ரிப்பன் போன்ற உடலமைப்புடன் ஒரேஞ் நிற துடுப்புகளுடன் கூடிய ‘டூம்ஸ் டே’ மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் அரிதாகவே காணப்படும் இந்த…

  • பிரான்ஸில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் பலி

    பிரான்ஸில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் பலி

    பிரான்ஸின் முல்ஹவுஸ் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து பயங்கரவாத குற்றம் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த நபர் இரண்டு பொலிஸாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தினார்,தடுக்க முயன்ற 69 வயது போர்த்துக்கல் பிரஜையை குத்திக்கொன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

  • அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு