Category: உலக செய்திகள்
-
நேபாளத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே கடும் பீதி
நேபாளத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டாவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததை உறுதிப்படுத்தியிருந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நேபாளத்தின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் பொது மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் மட்டும் ஏற்படவில்லை. இந்தியா மற்றும் திபெத்தின்…
-
விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த அமெரிக்க யுவதிகள்
கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யுவதிகள் அமெரிக்காவை சேர்ந்வர்கள் என கூறப்படுகின்றது. அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள் பெலிசேவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சென் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர்கள் மூன்று பேரும் ஹோட்டல்…
-
ஒன்றாரியோ தேர்தல் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு
ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 140 ஆண்டுகளில் முதல் முறையாக, பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே, கடுமையான பனிநிலையால் வாக்களிப்பு விகிதம் குறையுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒட்டாவா, டொரொண்டோ உள்ளிட்ட நகரங்களில் பனிப் பிரச்சனை தொடர்பாக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து பணிபுரிந்துவருகிறோம் என ஒன்றாரியோ தேர்தல் நிறுவனத்தின் ஊடக…
-
மேலும் 65 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 65 பேர் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்படும் சட்டவிரோத குடியேறிகளை தற்காலிக முகாம்களில் தங்க வைக்க மத்திய அமெரிக்க நாடான…
-
சூடானில் இராணுவ விமான விபத்து 46 பேர் பலி
சூடானில் இராணுவ விமான விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 10 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது. சூடானின் ஓம்துர்மான் (Omdurman) நகருக்கு கிழக்கே உள்ள வாடி சாயிட்னா (Wadi Sayidna) ஏர் பேஸில் இருந்து ஆன்டோனோவ் ஏர்கிராப்ட் நேற்று (25) டேக் ஆப் செய்யப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது. ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி வெடித்து விபத்துள்ளது. விமானத்தில் பயணித்த இராணுவ வீரர்கள்…
-
50க்கும் மேற்பட்டோர் கொங்கோவில் மர்ம காச்சலால் உயிரிழப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மர்ம நோயால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வடமேற்கில் உள்ள போலோகோ நகரில் முதல் வெடிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆப்பிரிக்கா அலுவலகம் கூறியது. ரத்தக்கசிவு காய்ச்சல் அறிகுறிகளைத் தொடர்ந்து மூன்று குழந்தைகள் வௌவால் சாப்பிட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெடிப்பு ஜனவரி 21 அன்று தொடங்கியது, மேலும் 53 இறப்புகள் உட்பட 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிப்ரவரி 9 ஆம் தேதி போமேட்…
-
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு கோல்ட் கார்ட்
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்ட் கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை…
-
வடக்கு அல்பெர்டாவில் குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது.
வடக்கு அல்பெர்டாவில் கடந்த வாரம் ஏழு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதாகியுள்ளார். இந்த சந்தேக நபர் மீது பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 19ம் திகதி இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அவசர சேவை பிரிவிற்கு தகவல் வழங்கபட்டது. ஒரு குழந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோல், இன்னொரு குழந்தை சிறிய கத்திக் காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளது. சம்பவத்துடன்…
-
11 ஆண்டுகளாய் தொலைந்துபோன விமானத்தை தேடும் மலேசியா
11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் இந்தியப் பெருங்கடலில் தொடங்கியுள்ளன. Ocean Infinity நிறுவனத்தின் ஆழ்கடல் ஆதரவுக் கப்பல் Armada 7806, பெர்த் (Perth) கடற்கரையிலிருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவைச் சென்றடைந்திருப்பதாக ஆஸ்திரேலிய, பிரிட்டன் ஊடகங்களின் அறிக்கை கூறுகிறது. இது தொடர்பில் அமெரிக்க, பிரிட்டன் நிறுவனங்களின் கடலடி தானியக்க இயந்திரங்கள் இந்தியப் பெருங்கடலின் தரைப் பகுதியை ஆராயத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது . 15,000 சதுர கிலோ மீட்டர்…
-
ரஷ்யா-உக்ரைன் போர் விவாதங்கள்
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், உக்ரைன் போரில் அமைதி ஒப்பந்தம் சரணடைவதாக இருக்கக்கூடாது என்றும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாமல் போர்நிறுத்தத்தை அர்த்தப்படுத்தக்கூடாது என்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி விரைவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க உள்ளதாகவும்…