Category: உலக செய்திகள்

  • Walmart கடையில் திருடியவர்களுக்கு நூதன தண்டனை நீதிபதி தீர்ப்பு

    Walmart கடையில் திருடியவர்களுக்கு நூதன தண்டனை நீதிபதி தீர்ப்பு

    அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள Walmart கடை ஒன்றில் திருடியவர்களுக்குக் கார்களைக் கழுவும்படி தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். Walmart கடைகளில் தொடரும் திருட்டுச்சம்பவங்களால் பொருள்களின் விலை அதிகரிக்கலாம், சில கிளைகள் மூடப்படும் சூழலும் ஏற்படலாம் என்று நீதிபதி கூறினார். Walmart கடையில் திருடியவர்களுக்கு நூதன தண்டனை! | Walmart Shoplifters Ordered To Wash Cars ஒரே நாளில் 48 திருட்டு வழக்குகள் இந்நிலையில் திருடுவோர் அனைவரும் கெட்டவர்கள் அல்லர், தங்கள் பொருளாதாரச் சூழலால்…

  • பாகிஸ்தானில் ஏற்பட்ட  வெடிகுண்டு தாக்குதல் 11 பேர் உயிரிழப்பு

    பாகிஸ்தானில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதல் 11 பேர் உயிரிழப்பு

    பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டடிருந்து வெடிகுண்டு (IED) வெடித்ததில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். பலுசிஸ்தான் அரசு செய்தி தொடர்பானர் ஷாஹித் ரிண்ட் “இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடக்க விசாரணையில்…

  • மீண்டும் மருத்துவமனையில் பிரான்சிஸ் பரிசுத்த பாப்பரசர் அனுமதி

    மீண்டும் மருத்துவமனையில் பிரான்சிஸ் பரிசுத்த பாப்பரசர் அனுமதி

    சுகயீனம் காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (14) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதாகும் பரிசுத்த பாப்பரசர் கடந்த சில வாரங்களாக சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக தனது உரைகளை வாசிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று காலை ஆராதனை நிகழ்விற்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் அவருக்கான தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வத்திக்கான் மருத்துவ அதிகாரிகள்…

  • பணய கைதிகளை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்படும் கமாஸ் தெரிவிப்பு.

    பணய கைதிகளை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்படும் கமாஸ் தெரிவிப்பு.

    இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிப்பதில் காலதாமதம் ஏற்படும் என, ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் அனைவரும்…

  • ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை நிச்சயம் மீட்போம் என உக்ரைன் உறுதி

    ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை நிச்சயம் மீட்போம் என உக்ரைன் உறுதி

    ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை தாம் நிச்சயம் மீட்போம் ”என நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரேன் உறுதியளித்துள்ளது. ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரேனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து. இந்நிலையில் குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் உக்ரேன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்தம் உமெரொவ், நோட்டோ தலைவர் மார் க் ரூட்டை, நேட்டோ தலைமையகத்தில்…

  • அதிகப்படியான வங்கி கடன் கட்ட முடியாமல் தவிக்கும் பிரான்ஸ் மக்கள்!

    அதிகப்படியான வங்கி கடன் கட்ட முடியாமல் தவிக்கும் பிரான்ஸ் மக்கள்!

    பிரான்ஸில் அதிகப்படியான வங்கிக்கடன்களினால் சிக்குண்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பிரெஞ்சு மக்கள் கடன்காரர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Banque de France தெரிவித்த தகவல்களின் படி, 2024 ஆம் ஆண்டில் €4.5 பில்லியன் யூரோக்கள் கடன் மீளச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கிட்டத்தட்ட 600,000 பேர் அதிக கடன்களில் சிக்கித்தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு தொகையாவும், கடன்காரர்களின் எண்ணிக்கையாவும் இது…

  • புகழ்பெற்ற அருங்காட்சியகம் பிரான்சில் மூடப்பட்டது

    புகழ்பெற்ற அருங்காட்சியகம் பிரான்சில் மூடப்பட்டது

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் (The Centre Pompidou) என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த பாம்பிடோ மையம் உள்ளது. 1977-ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஆண்டுக்கு 32 லட்சம் பொதுமக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து…

  • உக்ரைன் போர் குறித்து மும்முனை பேச்சுவார்த்தை

    உக்ரைன் போர் குறித்து மும்முனை பேச்சுவார்த்தை

    ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக மும்முனை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மனின் முனிச்சில் இன்று நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க, ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடுவார்கள் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி உக்ரைனில் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து இதன் போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்று ட்ரம்ப் கூறினார். அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை…

  • சட்டவிரோத குடியேறிகள் ட்ரம்ப்பை கண்டித்த போப் ஆண்டவர்

    சட்டவிரோத குடியேறிகள் ட்ரம்ப்பை கண்டித்த போப் ஆண்டவர்

    அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத குடியேறிகளை அதிபர் ட்ரம்ப் நாடு கடத்தி வரும் செயல்பாடு குறித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையோடு அமெரிக்காவின் சட்டங்களில் பல மாற்றங்களை உருவாக்கி வருகிறார். அந்த வகையில் குடியரசு தலைவராக பொறுப்பேற்றதுமே, அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றி வருகிறார். இந்தியா, கனடா, மெக்ஸிகோ என பல நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்க ராணுவம் விமானம் மூலமாக வெளியேற்றப்பட்டு…

  • கனடா மீதான வரிவிதிப்பால் அமெரிக்காவில் வீடுகள் விலை உயரும் ட்ரம்புக்கு ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை

    கனடா மீதான வரிவிதிப்பால் அமெரிக்காவில் வீடுகள் விலை உயரும் ட்ரம்புக்கு ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை

    கனடா மற்றும் மெக்சிகோ மீது வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவிகித வரி விதிப்பதாக கூறியுள்ள விடயம் இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், கனடா மற்றும் மெக்சிகோ மீது வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஜோ பைடன் சார்ந்த ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.…