Category: உலக செய்திகள்
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன், தான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாஸ் அமைப்பின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தனது வேலையை முடிப்பதற்காக நான் தேவையான அனைத்தையும் அனுப்புகின்றேன் என தெரிவித்துள்ள டிரம்ப், நான் சொல்வதை செய்யாவிட்டால் ஹமாசின் ஒரு உறுப்பினர் கூட பாதுகாப்பாகயிருக்கமுடியாது என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் நரகத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் என்றும், அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்,…
-
மாணவர்கள் சட்டத்துக்கு விரோதமான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது தடை விதிக்கும் டிரம்ப்
அமெரிக்க கல்லூரிகளில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவோ அரசுக்கு எதிராகவோ போராட்டம் செய்தால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிபர் டிரம்ப் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக, வெளிநாட்டு மாணவர்கள் போராடினால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து, டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள்…
-
ஐரோப்பாவில் புகை குண்டுகளை வீசி எதிர்க்கட்சியினர் தாக்குதல்
ஐரோப்பாவில் செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்தனர். மார்ச் 04 ஆம் திகதி கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி…
-
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க மக்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம் என தெரிவிப்பு
அமெரிக்க மக்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். இதன்போது எதிர்க்கட்சிகளிடன் கடும் அமளிக்கிடையே ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றவுடன் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நினைவாக்க உழைத்து வருகிறோம். கடந்த 6 வாரங்களில், நான் கிட்டத்தட்ட 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளேன், 400க்கும் மேற்பட்ட…
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி காணொலியொன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு நேற்று (02) லண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டை அடுத்து ஸெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து காணொலியொன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த காணொலியில் “ஐரோப்பாவிடமிருந்து தெளிவான ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம். அமைதி உண்மையானதாக இருக்க, உக்ரைனுக்கு உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை எனும் முக்கிய பிரச்சினையில் அனைவரும்…
-
ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக நிர்ணயித்த டிரம்ப்
அமெரிக்காவில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான ஆங்கிலம் பேசப்பட்ட போதிலும் காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி…
-
தண்ணீர் ஒவ்வாமையால் அவதிப்படும் பிரித்தானிய பெண்
தண்ணீரால் ஏற்படும் அரியவகை ஒவ்வாமையால் அவதிப்படுவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த கெண்டல் என்ற 25 வயதுடைய பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரியவகை ஒவ்வாமையால் இந்தப் பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாத்திரமே குளிக்கிறாராம் அதுமாத்திரமல்லாமல் சாதரணமாக தண்ணீரில் கை கழுவினாலும் வலி மற்றும் எரிச்சல் அதிகரிக்குமாம். குறித்தப் பெண்ணுக்கு இந்த ஒவ்வாமையானது 15 வயதில் இருந்து இருப்பதாகவும் இதற்கான சரியான மருந்து கண்டுப்பிடிக்காத காரணத்தால் வைத்தியர்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டம்.
அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில் டிஓஜிஇ செயல்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு நிா்வாகத்தில் எலான் மஸ்க் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அரசின் செலவினத்தைக் குறைப்பதற்கான மஸ்கின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, செயின்ட் லூயிஸ், நியூயாா்க், சாா்லட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமானோா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதோடு…
-
வயதான தாயை கொலை செய்த மகனுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை
அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் 81 வயதான தாயை கொலை செய்த 57 வயது மகனுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் வடமேற்கு பகுதியில் 2023 ஆண்டு ஜுன் 12 ஆம் திகதியே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகன், தாயின் கழுத்தை நெறித்துள்ளார். இதனையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னர் தலைமறைவான மக்கள் 2023, ஜுன் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கிலேயே…
-
தெற்கு கரோலினாவின் கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் மிர்ட்டில் கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது. இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை சுமார் 1,200 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இதனையடுத்து தென் கரோலினா ஆளுநர் ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.