Category: இலங்கை செய்திகள்
-
தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல்
தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசத்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன், உள்ளூராட்சி சபைகளுக்கான ஆயுட்காலம் முடிவடைந்தது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் இத்தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தமது அரசாங்கத்தின் கீழ் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்திருந்தது. அதன் பிரகாரம் ஆட்சிமாற்றத்தின் பின்னர் தேர்தல் தொடர்பிலான அறிவிப்புகளை தேசிய மக்கள் சக்தி வெளியிட்டது. உள்ளூராட்சிமன்றத்…
-
யாழ்– சென்னை விமான சேவை வெளியான புதிய அறிவிப்பு
சென்னையிலிருந்து – யாழ்ப்பாணம் பலாலி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு இந்திய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) தீர்மானித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இண்டிகோ விமான நிறுவனம் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஐந்து நாட்களுக்கு ஒரு விமானத்தை இயக்குகிறது. இந்த நிலையில், தற்போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகளின் பிரகாரம் எதிர்காலத்தில் மேலும் இரண்டு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. யாழ்ப்பாணம் –…
-
அதானி குழுமத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இலங்கையில் செயல்படுத்தப்பட உள்ள இரண்டு காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டங்களிலிருந்து மரியாதையுடன் விலக முடிவு செய்துள்ளதாக அதானி கிரீன் எனர்ஜியின் பணிப்பாளர்கள் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இலங்கைக்கான அதன் அர்ப்பணிப்பு அப்படியே உள்ளது என்றும், இலங்கை அரசாங்கத்தின் அபிலாஷைகளின் அடிப்படையில் எதிர்கால ஒத்துழைப்புக்குத் திறந்திருப்பதாகவும் அதானி குழுமம் மேலும் கூறுகிறது. உள்ளூர் ஆய்வுகள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் சுற்றுப்புறத்தில் முதலீட்டுத் திட்டங்களிலிருந்து அதானி குழுமம் குறிப்பிடத்தக்க அளவில் பின்வாங்குவதை இந்நடவடிக்கை குறிக்கிறது. அதானி…
-
வருடாந்தம் சுமார் 250 சிறுவர்கள் உயிரிழப்பு!
புற்றுநோயால் வருடாந்தம் 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.இவர்களில் வருடாந்தம் சுமார் 250 சிறார்கள் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கான இயலுமை குறைவாக உள்ளதாகவும் சமூக வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்தார். குழந்தை பருவ புற்றுநோயை ஆரம்பத்திலேயே…
-
காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸார் முக்கிய அறிவிப்பு !
பொலிஸார் காதலர் தினத்தை நாளை (14) முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரமொன்றை வெளியிட்டுள்ளனர்.இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், காதலர் தினத்தன்று, அதனை கொண்டாட பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன், உங்கள் பெற்றோர் உங்களுக்கு கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை யோசியுங்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கைவிடப்பட்ட வேலைத் திட்டங்களை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை!
கடந்த அரசாங்க காலத்தில் இடைநடுவே கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களின் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் பாலங்கள், வளைவுகள் மற்றும் கிராமப்புற வீதிகள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துறைசார் பிரதியமைச்சர் ருவன் செனவிரத்ன குறிப்பிட்டார். இந்த வேலைத் திட்டங்களுக்கான நிர்மாணப்பணிகள் உரிய திட்டமிட்டமின்றி ஆரம்பிக்கப்பட்டமையினால் அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுனார். இது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக இடைநடுவே கைவிடப்பட்ட…
-
குரங்குகளை பிடித்து தீவு ஒன்றிற்கு அனுப்பும் திட்டம் ஆரம்பம்!
குரங்குகளை பிடிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு பிடிக்கப்படும் குரங்குகளை ஒர் தீவிற்கு கொண்டு போவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக ஓர் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.குரங்குகளை பிடிக்கும் இந்த பரீட்சார்த்த முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.குரங்குகளினால் பயிர்ச் செய்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்…
-
யூடியூப் சனலுக்கு எதிராக சுஜீவ முறைப்பாடு
தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு எதிராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறைப்பாடு அளித்துள்ளார். சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒருவரால் நடத்தப்படும் யூடியூப் சேனல், தனக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாகவும் மனுதாரர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தப் முறபைபாட்டில் யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகிளையும் பிரதிவாதியாகக் குறிப்பிட்டு, இந்த வழக்கில் யூடியூப் நிறுவனம் இணைய…
-
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், புத்தாண்டு காலத்தில் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ச்சியாக விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில்…
-
குவைத் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு
குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபா மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு 2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றது. தற்போது இலங்கையின் அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கான சாத்தியங்கள்…