Category: இலங்கை செய்திகள்
-
இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது
ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கலேவெல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை முன்னெடுப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவித்தார்.
அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட். நிறுவனத்துடன் -இலங்கை தொடர்புபடுத்தப்படும் விவகாரம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர; அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கையின் பெயரை குறிப்பிட்டு சர்வதேச மட்டத்தில் பலவிடயங்கள் பேசப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு நாமல் ராஜபக்ஷ உங்களுக்கு எம்.பி.உங்களுக்கு…
-
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டமூல வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும் என தெரிவிப்பு
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வழக்கை ஒரே நாளில் தீர்த்திருக்க முடியும். ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதத்தினாலேயே தீர்ப்பு வெளியாவதற்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உள்ளூராட்த் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் அறிவித்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அதன்போது ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் உள்ளடக்கத்தை…
-
மொழியுரிமையை மறுத்த சிறிலங்கா காவல்துறை : வேலன் சுவாமிகள் கடும் கண்டனம்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நீதிக்கான பேரணி தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், குறித்த வழக்கு நாளை நாளை (14) கிளிநொச்சி (kilinochchi) நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. இந்த வழக்கிற்கு முன்னிலையாகுமாறு சிறிலங்கா காவல்துறையினர் சிங்கள மொழியில் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர், வேலன் சுவாமிகள் (velan swamigal) தெரிவித்துள்ளார்.இவ்வாறு சிங்கள மொழியில் வழங்கப்பட்ட அறிவித்தல் மூலம் மொழியுரிமை முற்றாக…
-
தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு தீர்வு கிட்டாது: அடித்துக் கூறும் தமிழ் தரப்பு
தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சனை என பொதுவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் (Velan Swamigal) தெரிவித்துள்ளார். வலி வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ விகாரையை அகற்றுமாறு கோரி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வலி வடக்கு தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை அவர்களுக்கு தெரியாமல்…
-
எமது வாய்களை மூட வர வேண்டாம் : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த சஜித்
நாட்டில் ஏற்பட்ட மின்தடைக்கு இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க எனக்கு சந்தர்ப்பம் தர வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். இன்று (14) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு…
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்.
வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றையதினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு…
-
எரிந்து நாசமாகும் அபாயத்தில் எல்ல சுற்றுலா வலயம்: மோசமாக பரவும் காட்டுத் தீ
சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல பாறை பகுதியில் ஏற்பட்ட தீ, தற்போது எல்ல மலைத்தொடர் முழுவதும் பரவும் அபாயத்தில் உள்ளது. தற்போது, பண்டாரவளை வன பாதுகாப்பு அதிகாரிகள், எல்ல பிரதேச செயலகம் மற்றும் தியத்தலாவை விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் தீயை அணைக்க கடுமையாக செயற்பட்டு வருகின்றனர். காற்றின் வேகம் மற்றும் செங்குத்தான சரிவுகள் காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், வனவிலங்கு மண்டலத்திற்கு மேலே உள்ள வனப் பாதுகாப்பு மண்டலத்திற்குள் தீ…
-
யாழ். செம்மணியில் மனித புதைகுழி…! தொடர்ந்து மீட்கப்படும் எலும்புக் கூடுகளால் அச்சம்
யாழ்ப்பாணம் (Jaffna) – செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள அரியாலை சிந்துபாத் மயானத்தில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. இந்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் நேற்று வியாழக்கிழமை (13) கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த மயானத்தில் நல்லூர் பிரதேச சபையினால் மின்தகன எரியூட்டி அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த மயானத்திற்குள் எரியூட்டி அமைப்பதற்காக நல்லூர் பிரதேச சபையினால் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய எரியூட்டி அமைப்பதற்காக கிடங்கு வெட்டிய போது மண்டையோடு உட்பட்ட…
-
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட மூவருக்கு எதிராக வழக்கு
யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) துணைவேந்தர் உட்பட மூவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.குருபரன் மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்…