Category: இலங்கை செய்திகள்

  • சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக  நியமனம்

    சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம்

    ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் அங்கீகாரத்தைப் பெறத் தவறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எ.சுமந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சின் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியை கையகப்படுத்தும் எம்.எ.சுமந்திரனின் அடுத்த கட்ட நகர்வாக இந்த நியமனம் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு, இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலுள்ள அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் கூடியது. மாவை சேனாதிராவின் மறைவின் பின்னர் முதல் முறையாக…

  • இலங்கைக்கு சீன அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

    இலங்கைக்கு சீன அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

    ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழுவினர் எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.  இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளதுடன், கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீன அமைச்சர் பான் யூ, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள்…

  • அஸ்வெசும’  தொடர்பில் தலைமைச் செயலகம் அறிவிப்பு

    அஸ்வெசும’ தொடர்பில் தலைமைச் செயலகம் அறிவிப்பு

    அஸ்வெசும’ நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர, ஏனைய மூத்த குடிமக்களுக்கும், தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை ‘அஸ்வெசும’ உதவித்தொகை பெற்று வரும் மூத்த குடிமக்கள், இந்த மாதத்திற்கான உதவித்தொகையை 20ஆம் திகதி முதல் தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களில் இருந்து பெற முடியும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச்…

  • ஜனாதிபதி வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வரை பார்வையிட்டார்

    ஜனாதிபதி வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வரை பார்வையிட்டார்

    2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டுள்ளார். இதன்போது, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இணைந்து கொண்டுள்ளார்.

  • ஆயுதம் திருடியதில் கடற்படை வீரர் கைது

    ஆயுதம் திருடியதில் கடற்படை வீரர் கைது

    கொழும்பு துறைமுகத்தில் உள்ள ரன்வல கடற்படை ஆயுத களஞ்சியத்தில் இருந்து திருடப்பட்ட டி-56 துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. கிடைத்த தகவலின்படி, கடற்படை தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, குளியாபிட்டி காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன், கல்பொல காலனியின் இலுஹேன பகுதியில் கடற்படையில் பணியாற்றும் ஒரு சிப்பாயின் வீட்டை சோதனை செய்து, இந்த துப்பாக்கியைக் கண்டுபிடித்தனர். சந்தேகநபர் 2021 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுக ரன்வல முகாமில் இணைக்கப்பட்டு ஆயுதக் கிடங்கிற்குப்…

  • ஹஷிஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது

    ஹஷிஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது

    கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 360 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதான கனேடிய பெண், கனடாவின் ரொறன்ரோவில் இருந்து சனிக்கிழமை (15) வந்தடைந்தார். அதன் பின்னர் அவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்துறைக்கு கிடைத்த சர்வதேச புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கொண்டு வந்த இரண்டு…

  • அசோக ரன்வல சான்றிதழ்களை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

    அசோக ரன்வல சான்றிதழ்களை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

    தனது கல்வித் தகமைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் கல்வி தகமைகளை வழங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அது மக்களின் பிரச்சினை அல்ல என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் பி.பி.சி. சிங்களத்திற்கு அளித்துள்ள செவ்வியில் கூறியுள்ளதாவது, சான்றிதழ்களை வழங்க பாராளுமன்றத்தில் ஒரு முறை உள்ளதா? அத்தகைய பாரம்பரியம் உள்ளதா? இவை…

  • பயிர்ச் செய்கைக்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பம் கால்நடை அமைச்சு தெரிவிப்பு

    பயிர்ச் செய்கைக்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பம் கால்நடை அமைச்சு தெரிவிப்பு

    பயிரிடப்படாத அனைத்து நிலங்களிலும் பயிர் செய்யும் தேசிய வேலைத்திட்டம் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, விவசாய மற்றும் கால்நடை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ஒரு கையளவு விளைநிலம் என பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். இதன் கீழ் நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யப்படாத காணிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  • தனியார் பஸ் விபத்திற்குள்ளானதில் மூவர் காயம்

    தனியார் பஸ் விபத்திற்குள்ளானதில் மூவர் காயம்

    கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று, இன்று அதிகாலை 04:40 மணியளவில், கவிழ்ந்ததாக விபத்துக்குள்ளானது. பாணந்துறை நகரில் இருந்து சென்றுகொண்டிருந்த போதே, இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மூவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பெண்கள் ஆவர்.

  • ரணில் மற்றும் மைத்திரி சந்திப்பு

    ரணில் மற்றும் மைத்திரி சந்திப்பு

    முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, ஷெஹான் சேமசிங்க, நிமல் லான்சா, நிமல் சிறிபால டி சில்வா, பிரேம்நாத் சி. டோலவத்தே மற்றும் சாகல ரத்நாயக்க…