Category: இலங்கை செய்திகள்

  • தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான்.

    தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான்.

    இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று புதன்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தமிழகம் மற்றும் மலையக மக்கள் இடையிலான தொடர்பு பற்றி இருவரும் கலந்துரையாடியுள்ளதுடன், எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.

  • கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

    கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

    கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த சந்தேகநபர், பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அதிகாரிகள்…

  • காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை

    காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை

    மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்த உடன்பாடொன்றை எட்டத் தவறியதால் நிறுவனம் திட்டத்திலிருந்து விலகியதாக கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “உள்ளூர் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலமாகவோ மக்கள் நியாயமான விலையில்…

  • சஜித் ஆதங்கம் நீதிமன்றில் துப்பாக்கிச்சூடு

    சஜித் ஆதங்கம் நீதிமன்றில் துப்பாக்கிச்சூடு

    நாட்டில் கொலைகள் அதிகரித்துள்ளதால், வீதியில் நடந்து செல்லவோ அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில், மேலும், “சட்டம் ஒழுங்கில் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது. தினமும் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. சிறு குழந்தைகள் கூட கொல்லப்படுகிறார்கள். இதைவிட ஒரு…

  • யாழில் இடம்பெற்ற கோர விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

    யாழில் இடம்பெற்ற கோர விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

    யாழ்ப்பாணம் (Jaffna) காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து அரியாலை – மாம்பழம் சந்தியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த குறித்த நபரின் மீது, யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) கொண்டு செல்லப்பட்டுள்ளது.…

  • நாடளாவிய ரீதியிலான மின்தடைக்கு காரணம் வெளியானது

    நாடளாவிய ரீதியிலான மின்தடைக்கு காரணம் வெளியானது

    நாடு முழுவதும் கடந்த 09ஆம் திகதியன்று ஏற்பட்ட மின் தடை குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது. எனவே, மீண்டும் மின்தடை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

  • வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்

    வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்

    2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

  • முந்தைய அரசாங்க பொருளாதார திட்டத்தின் தொடர்ச்சி:எந்த வித்தியாசத்தையும் நாங்கள் காணவில்லை.

    முந்தைய அரசாங்க பொருளாதார திட்டத்தின் தொடர்ச்சி:எந்த வித்தியாசத்தையும் நாங்கள் காணவில்லை.

    முந்தைய அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய வரவு செலவுத்திட்ட உரை இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இந்தத் திட்டம் தவறு என்று தான் கூறவில்லை என்றாலும், அரசாங்கத்தின் சித்தாந்த நிலைப்பாடு குறித்து இது கடுமையான கவலைகளை எழுப்புகிறது என்று சில்வா கூறினார். “ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் கட்சி கருத்தியல் அடிப்படையிலான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது. இங்கு கலந்துரையாடப்பட்டது ஒரு புதிய தாராளமய வேலைத்திட்டம். அவர்கள் 40 ஆண்டுகளாக இதுபோன்ற கொள்கைகளை…

  • சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக  நியமனம்

    சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம்

    ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் அங்கீகாரத்தைப் பெறத் தவறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எ.சுமந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சின் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியை கையகப்படுத்தும் எம்.எ.சுமந்திரனின் அடுத்த கட்ட நகர்வாக இந்த நியமனம் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு, இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலுள்ள அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் கூடியது. மாவை சேனாதிராவின் மறைவின் பின்னர் முதல் முறையாக…

  • இலங்கைக்கு சீன அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

    இலங்கைக்கு சீன அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

    ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழுவினர் எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.  இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளதுடன், கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீன அமைச்சர் பான் யூ, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள்…