Category: இலங்கை செய்திகள்
-
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வரும் சிவகங்கை கப்பல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (22) நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் காங்கேசன்துறைக்குப் புறப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை இடையிலான இரு நாட்டு கலாசாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நாகையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு புதிய சர்வதேச பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது. கப்பல் சேவையானது சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் புயல், மழை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால்…
-
புதிய முச்சக்கர வண்டியின் விலை 20 இலட்சம்!
இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், முச்சக்கர வண்டி இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கையில் பிரதான முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமொன்று முச்சக்கர வண்டிகளுக்கான முன்கூட்டிய ஓடர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் அறிந்தவண்ணம், புதிய பஜாஜ் முச்சக்கர வண்டியின் விலை, பொருட்கள் மற்றும் சேவைகள் தவிர்த்து ரூ.16,90,678 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெறுமதி வரி சேர்க்கப்பட்டு, ஒரு புதிய முச்சக்கர வண்டியின் விலை ரூ.19,95,225 எனத்…
-
அரசு ஒதுக்கிய நிதியில் 67 வீதமானவை இந்தியாவின் நிதி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1350 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவை அதிகரித்து காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சவால் விடுத்துள்ளார். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ”1700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கையெடுத்த போது தேசிய மக்கள் சக்தியினர் எம்மை விமர்சித்தனர். 2138 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர். ஆனால், தற்போது 1700 ரூபாவை…
-
உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அதிக வாடகை?
மாதிவலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு குறைந்த வாடகை வசூலிக்கப்படுவதால், அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எம்.பி.க்களின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கான இன்னும் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே மாதாந்திர கட்டணமாக அறவிடப்படுவதாக கூறப்படுகிறது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது எம்.பிக்களுக்கான வீட்டு வாடகைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பல கட்சிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளன. இழப்பை ஈடுகட்ட, இந்த வீடுகள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தது 15,000 அல்லது 20,000 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும்…
-
இலங்கையில் என்கவுன்டர் ஆரம்பம்!
கொட்டாஞ்சேனை நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். நேற்று (21) இரவு, பொலிஸாருக்குச் சொந்தமான துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரைச் சுட முயன்றபோது, அவரைத் தடுத்து நிறுத்தினார். சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்தார். சம்பவம் தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க, “நேற்று…
-
திஸ்ச விகாரை காணி மனித புதைகுழியாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது..!
சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவரால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, படையினரை பொறுத்தவரையில் தமிழர் பிரதேசத்தில் நாட்டின் சட்டங்கள் அவர்களின் இரும்பு சப்பாத்தின் கீழ் என்பதற்கு இன்னொரு அடையாளமே அவர்களால் தையிட்டியில் தனியார் காணியில் கட்டப்பட்ட திஸ்ஸ…
-
மற்றொரு துப்பாக்கிப் பிரயோக முயற்சி தோல்வியில் முடிந்தது.
நீர்கொழும்பு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் மற்றொரு துப்பாக்கிப் பிரயோக முயற்சி தோல்வியடைந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போது துப்பாக்கி இயங்காததால் தப்பிச் சென்றுள்ளனர். கணேமுல்ல சஞ்சீவவின் சீடரான கமாண்டோ சாலிந்த என்ற நபர், குறித்த கடையில் கப்பம் கேட்டதாகவும், பணம் கொடுக்காததால் இந்தத்…
-
‘வரவு – செலவுத் திட்டம்’ மக்கள் ஆணைக்கு எதிரானது
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள் மற்றும் பதில்களை பகுப்பாய்வு செய்யும் போது, அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும். வளமான நாடு அழகான வாழ்க்கை, நாடு அநுரவோடு என முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் இதில் அமைந்துள்ளனவா என பார்க்கும் போது இந்த வரவுசெலவுத் திட்டம் வாக்குறுதியளித்தபடி…
-
ஜனாதிபதி அநுரவுக்கு மாலைதீவுக்கு வருமாறு அழைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றி தொடர்பில் மாலைதீவு குடியரசின் வாழ்த்துக்களைத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர், தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவிற்குப் பிறகு, வலுவான நாடாக எழுச்சியடைந்து வருவது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், மாலைதீவை…
-
மட்டக்களப்பு நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய வியாழக்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன். நீதிமன்ற கட்டிடத் தொகுதியை அண்டிய வளாகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சகல வாசல்களிலும் காவல் துறையினைர பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர், மேலும் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிக்கும் சகல வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டதன் பின் நீதிமன்ற வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது நீதிமன்ற பிரதான வீதிகளில் போக்குவரத்து போலிசாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளமையும் அவதானிக்க…