Category: இலங்கை செய்திகள்
-
இன்று இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு
அநுர அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்ப்பை இன்று மாலை 6 மணியளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, இரண்டாவது வாசிப்பிற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதியமைச்சராக பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன்படி, பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இன்று…
-
புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நியூசிலாந்தில்
நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. வெலிங்டனிலுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது, அந்த அறிக்கையில், புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம் லெவல் 8, எண். 38, பெதெரிக் டவர், வாரிங் டெய்லர் தெரு, வெலிங்டன் சென்ட்ரல் எனும் முகவரியில் அமைந்துள்ளது. பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 மணி முதல்…
-
லண்டனில் தையிட்டியில் பௌத்த விகாரையை உடனடியாக அகற்ற வேண்டுமென கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கை இராணுவத்தினரால் சட்டவிரோதமாக தமிழரின் பூர்வீக நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை நீக்க கோரி பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் முன்பாக மாபெரும் போராட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. எமது தாயக நிலப்பரப்பான யாழ்ப்பாணம் – தையிட்டியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவை உலக நாடுகளுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றதுடன், இதனை ‘தமிழீழ சுயநிர்ணய…
-
பிரசன்ன பெரேரா ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமனம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. பிரசன்ன பெரேரா பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு, களனி பல்கலைக்கழகத்தில் வெகுசன தொடர்பாடல் பட்டப்பின் படிப்புக்கான பட்டத்தையும் பெற்றுள்ளார்.
-
காட்மோர் நீர் வீழ்ச்சியில் மீட்கப்பட்ட சடலம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்மோர் நீர் வீழ்ச்சி பகுதியில் சில நாட்களுக்கு முன் இறந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கருத்து தெரிவிக்கையில், சுமார் நான்கு ஐந்து தினங்களுக்கு முன் இறந்த நபர் ஒருவரின் சடலம் எனவும் இறந்த நபர் பற்றிய…
-
எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் – நாமல் எம்.பி தெரிவிப்பு
எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர், உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டை தீக்கிரையாக்க இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதில்லை, புதிய நாட்டிற்காக இளைஞர்கள் வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக, நாம் ஒரு புதிய பயணத்தைத்…
-
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு : அரசாங்கத்தின் தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதேநேரம் எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடித்து வரும் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் பொது பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற…
-
வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பெற்று வீசிய மாணவி கைது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலக்கூடத்தில் குழந்தையை பிரசவித்து ஜன்னல் வழியாக வீசிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், சிசு காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயர் தரத்தில் கல்வி கற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் வயிற்று வலி என கூறி மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மாணவியை சோதனை…
-
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிப்பு
நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போது பேசிய திசாநாயக்க, சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சித்ததாகக் கூறப்படும் தகவல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
-
யானை ரயில் மோதலுக்கு தீர்வை வழங்குங்கள் – சஜித் கோரிக்கை
உலகளாவிய ரீதியில் காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க பல வெற்றிகரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய ரயில்வே கூட வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து ‘கவக்’ என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. வெப்பநிலையை கண்கானிக்கும் கேமராக்கள் போன்றவைகளும் இங்கு பயன்படுத்தப்படுவதால் இதில் கவனம் செலுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கென்யா போன்ற நாடுகளில் தூண்களுக்கு…