Category: இலங்கை செய்திகள்
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என கூறப்பட்டுள்ளது. அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் உட்பட்டோரை சந்திக்கவுள்ளார். மேலும், சம்பூருக்கு மின் திட்டமொன்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் வருகையையொட்டி…
-
விலங்குகள் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டம் நாமல் கருணாரத்ன தெரிவிப்பு .
நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் குரங்குகள், மயில்கள் மற்றும் மரஅணில்களின் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களில் சுற்றித் திரியும் வனவிலங்குகளை எண்ணி தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதற்காக 5 நிமிடங்கள் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும்…
-
1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். இதன் போது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர். தொடர்ந்து கொக்கோவில் பகுதியில் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். இந்நிலையில்,…
-
இன்று முதல் புனித ரமலான் நோன்பு காலம் ஆரம்பம்
புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முகமது முனீர் குறிப்பிட்டார்.
-
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றும் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. என்றாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத சலுகையை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கூறியுள்ளது. மூன்று சதவீத சலுகையை இரத்து செய்யும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய…
-
சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட இலங்கை நிதி வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கையின் 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. மூன்றாவது மதிப்பாய்வின் மூலம் 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வசதி நான்காவது தவணையாக இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம், சர்வதேச நாணய நிதியம் இன்றுவரை இலங்கைக்கு வழங்கிய மொத்த நிதி உதவி 1.34 பில்லியனை எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சமூக…
-
இதுவரையில் அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் இடம்பெற்றுள்ளன: நுகர்வோர் அதிகார சபை தெரிவிப்பு
ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 400 சோதனைகள் நடந்துள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை அதிகபட்சமாக 260 ரூபாய்க்கு விற்கபட வேண்டும். அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் எந்தவொரு விநியோகஸ்தர்களும் அல்லது அதிக பணம் கோரிய வர்த்தகர்களும் இருந்தால், அதிகாரசபையின் அவசர…
-
பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம்
வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030” அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்றுஇடம்பெற்றது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைகள் மற்றும் டிஜிட்டல் மூலோபாயங்கள், அவற்றின் வினைத்திறனான மற்றும் சூழல்நேய பயன்பாடு மற்றும் இந்த வலுசக்தி முறைகளின் ஊடாக நாட்டின் பொருளாதார ஆற்றலை எவ்வாறு உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்…
-
இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம்
இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இந்திய சுற்றுலாத்துறையில் இயங்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பில் திறக்கப்படவுள்ள புதிய கேசினோ தொடர்பில் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். IATO வின் தலைவர் ராஜீவ் மெஹ்ராவின் கூற்றுப்படி, இலங்கை இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள அழகான தீவாக இருப்பதாலும் கலாச்சார உறவுகள் மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கொண்டிருப்பதாலும் இந்திய பயணிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில்…