Category: இலங்கை செய்திகள்

  • இலங்கையின் பிரபல மருத்துவமனையில் ஏற்பட்ட மோசடி

    இலங்கையின் பிரபல மருத்துவமனையில் ஏற்பட்ட மோசடி

    இலங்கையின் பிரபலமான புற்றுநோய் மருத்துவமனையான கொழும்பு – மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கான நன்கொடை கணக்கில் இருந்த 40 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. அதன்படி, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் எந்தவொரு பயனுள்ள நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கிடையில், தேசிய சுகாதார மேம்பாட்டு நிதியத்திற்கு நன்கொடையாக பெறப்பட்ட சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய், நிதியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை…

  • உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி குறித்து வெளியான அறிவிப்பு

    உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி குறித்து வெளியான அறிவிப்பு

    உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தின் பின்னரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அளவில் தேர்தலை நடத்தக்கூடிய வழியுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி…

  • உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டம் தொடர்பான சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு

    உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டம் தொடர்பான சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு

    உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான சட்டம் குறித்த சட்ட விதந்துரைகள் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றின் விதந்துரைகள் அல்லது சட்ட விளக்கம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன(Jagath Wickramaratne) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியினர் உள்ளூராட்சி மன்ற சட்டம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் விசேட சட்டம் தொடர்பிலே…

  • தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த யாழ் இளைஞர்

    தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த யாழ் இளைஞர்

    யாழ்ப்பாணத்தில் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது யாழ்ப்பாணம் – கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் தனது வீட்டில் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சடலம் மீதான…

  • துப்பாக்கிதாரி ஒருவர் கைது

    துப்பாக்கிதாரி ஒருவர் கைது

    துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. சந்தேக நபர் நேற்று (04) பிற்பகல் மட்டக்குளிய கந்திரானவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவர் வசம் இருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுவெல, மேல் போமிரிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்…

  • 28 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

    28 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

    மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை நேற்று (04) காலை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04) காலை விடத்தல் தீவு குளப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 13 பொதிகளை கொண்ட கேரள கஞ்சா தொகையை மீட்டனர். சுமார் 28 கிலோ…

  • நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட அதிரடி ட்வீட்!

    நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட அதிரடி ட்வீட்!

    இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தனது “X” தளத்தில் பதிவொன்றை இட்டு, இலங்கை மட்டும் அண்மைய ஆண்டுகளில் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID, மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும்,…

  • இலங்கை ஜனாதிபதி அநுரவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

    இலங்கை ஜனாதிபதி அநுரவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

    சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வௌியிட்ட சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி கீழே… தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு…

  • இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்று

    இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்று

    77வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று (04) காலை சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்த செலவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்தார். இந்த ஆண்டு சுதந்திர…

  • அநுர அரசிடம் இருந்து தப்பித்துக் கொள்ள மகிந்த கும்பலின் சூழ்ச்சி

    அநுர அரசிடம் இருந்து தப்பித்துக் கொள்ள மகிந்த கும்பலின் சூழ்ச்சி

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட ஏழு நாள் பிரித் போதனை ஒரு மறைமுக அரசியல் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. பாரிய நிதி மோசடி மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமகால அரசாங்கத்தின் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் ஏழு நாள் பிரித் போதனை ஏற்பாடு செய்யப்பட்டதாக பொதுஜன பெரமுன கட்சியின்…