Category: இலங்கை செய்திகள்

  • தந்தையின் செயலால் பரிதாபமாக உயிரிழந்த மகன்

    தந்தையின் செயலால் பரிதாபமாக உயிரிழந்த மகன்

    செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பிரதேசத்தில் நேற்று (06) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக வீட்டுக்கு பெறப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயிரிழந்தவர் நெலும்வெவ, சமகிபுர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினத்தன்று சுகயீனமுற்றிருந்த தனது தாய்க்கு உணவளிப்பதற்காக அருகில் உள்ள வீட்டுக்கு சென்றிருந்த வேளையில், நாய்களிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அவரது தந்தையினால் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியதில் குறித்த நபர்…

  • கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

    கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

    மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான ஓல்கோட் மாவத்தை பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  • இலங்கை பாடசாலை மாணவி வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

    இலங்கை பாடசாலை மாணவி வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

    கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்டமா…

  • வேலை  வாய்ப்பு என்று கூறி பாரிய மோசடி

    வேலை வாய்ப்பு என்று கூறி பாரிய மோசடி

    அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையை பயன்படுத்தி மோசடியான விளம்பரம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. வேலை வாய்ப்புகளை…

  • நெல் கொள்வனவை முன் இட்டு அரச களஞ்சியசாலைகள் திறப்பு

    நெல் கொள்வனவை முன் இட்டு அரச களஞ்சியசாலைகள் திறப்பு

    நெல் கொள்வனவை முன்னிட்டு இன்று (06) முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அறுவடை இடம்பெறும் கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த குறிப்பிட்டார். நெல் கொள்வனவிற்காக திறைசேரியில் இருந்து 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லுக்கான நிர்ணய விலைகள் நேற்று (05) அறிவிக்கப்பட்டன. அதற்கமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல் 120…

  • மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு – விசாரணை திகதி வெளியான முக்கிய  அறிவிப்பு

    மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு – விசாரணை திகதி வெளியான முக்கிய அறிவிப்பு

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு இன்று (06) நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

  • பெண்ணொருவர் கழுத்து அறுத்து தீ வைத்து கொலை

    பெண்ணொருவர் கழுத்து அறுத்து தீ வைத்து கொலை

    ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கணவர் வீடு திரும்பி மனைவியைச் தேடிய போது, ​​அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தக்…

  • கைது செய்யப்படுவாரா கோட்டபாய

    கைது செய்யப்படுவாரா கோட்டபாய

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில முன்கூட்டியே ஊகித்திருக்கின்றார் என்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அவர் முன்னரே அறிந்திருக்கின்றார் எனவே தோன்றுகின்றதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று செவ்வாய்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது…

  • இளைஞனை சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரிகள் பணி இடை நிறுத்தம்

    இளைஞனை சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரிகள் பணி இடை நிறுத்தம்

    வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பணிகளை இடைநிறுத்த பதில் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சுமார் 6 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நிறுத்தப்பட்டுள்ளனர். விசேட புலனாய்வுப் பிரிவு விசாரணை வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, கும்புறுபிட்டிய பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கல்கிஸ்ஸை…

  • சட்டவிரோத கார் இறக்குமதி;  கைதான தொழிலதிபர்

    சட்டவிரோத கார் இறக்குமதி; கைதான தொழிலதிபர்

    இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில் பதிவு செய்த குற்றச்சாட்டில் வாகன தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மொரொன்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் என கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரை…