Category: இலங்கை செய்திகள்

  • பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

    பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

    பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும்  பிரதி பொலிஸ்மா அதிபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலருக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, வழங்கப்படும்…

  • E-8 விசா வேலைவாய்ப்பு மோசடி குறித்து வௌியான அறிவிப்பு

    E-8 விசா வேலைவாய்ப்பு மோசடி குறித்து வௌியான அறிவிப்பு

    தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவின் கீழ் வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, தனி நபர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. E-8 தொழில் பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது தொடர்புடைய பயிற்சிக்காக எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம், தனிநபர் அல்லது தனிநபர் குழுவிற்கும் இதுவரை எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…

  • ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

    ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி என்றும், அந்தத் திட்டத்திற்கு ஏற்ப கல்வியை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நாட்டின் மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கும், மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பதாக நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவா(Yohei Sasakawa) இதன்…

  • டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி!

    டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி!

    அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கலில் டிஜிட்டல் அடையாள அட்டை முக்கிய திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையான ‘GovPay’ கட்டண வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (7) நடைபெற்ற இந்த நிகழ்வில், டிஜிட்டல் மயமாக்கல் ஒவ்வொரு நபருக்கும் ஒரு கலாச்சார வாழ்க்கையை வாழ இடமளிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். “நமது நாட்டில்…

  • இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படும் முக்கிய குற்றவாளிகள்

    இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படும் முக்கிய குற்றவாளிகள்

    நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று (07) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளனர். டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸார் குறித்த சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிக்கையை வௌியிட்டிருந்தனர். குறித்த மூன்று சந்தேக நபர்களும் இன்று காலை UL-226 ரக விமானத்தில்…

  • மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது!

    மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது!

    சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) பிரதி ஆணையாளர் ஒருவர் நேற்று(5) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட துணை ஆணையாளர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஹம்பாந்தோட்டை அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டு தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்…

  • அடுத்த வாரம் டுபாய் செல்கிறார் அனுர!

    அடுத்த வாரம் டுபாய் செல்கிறார் அனுர!

    உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தப் விஜயத்தை மேற்கொள்வதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.

  • அரச சின்னங்களை பயன்படுத்தி மோசடி சம்பவங்கள் – கணினி பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

    அரச சின்னங்களை பயன்படுத்தி மோசடி சம்பவங்கள் – கணினி பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

    அரச நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு காணப்படுவதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதன் மூலம் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் மோசடி இடம்பெறுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார். மேலும் பல அரச நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி தொழில் வெற்றிடம் காணப்படுவதாக பல…

  • அர்ச்சுனா எம்.பி க்கு எச்சரிக்கை!

    அர்ச்சுனா எம்.பி க்கு எச்சரிக்கை!

    தனது அறிவித்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை படைக்கல சேவிதர்களை கொண்டு சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் என்று பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்வி சாலி கடுமையாக எச்சரித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரிடத்தில் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது சபாபீடத்தை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் வசனமொன்றை வெளியிட்டதாக ஏற்பட்ட சர்ச்சையின்போது அர்ச்சுனா எம்.பி. அமைதியற்ற முறையில் நடந்துகொண்டமையினால் சபாநாயகர் இவ்வாறு…

  • அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை

    அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார். இந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்துவதும், கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கான திட்டங்களைத் தொடங்குவதும் அமெரிக்காதான். மேற்கத்திய நாடுகள்…