Category: இலங்கை செய்திகள்
-
நீர் விநியோகமும் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும், உடனடியாக மின்சாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
லிட்ரோ திருத்தம் நிதியமைச்சு மௌனம்
பெப்ரவரி மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தை எரிவாயு விலைக்கேற்ப நாட்டின் எரிவாயு விலைகள் மாதந்தோறும் திருத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படும் இருப்பினும், பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. உலக சந்தையில் எரிவாயு விலை…
-
மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கம் – சஜித் குற்றச்சாட்டு
இன்று நாட்டில் மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே காணப்படுகின்றது. மலிவு விலையில் தேங்காய் அரிசி மற்றும் உப்பு வாங்க முடியாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முடியாத அரசு எவ்வாறு மக்களை வாழ வைக்கப்போகிறது என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைத் தருவதாக கூறினர், ஆனால் இன்று அவர்கள் வயல்வெளிகளுக்குச் சென்று விவசாயியை சந்திப்பதற்கே பயப்படுகின்றனர். இவ்வாறான பொய்களை…
-
மின் தடையால் ரயில் போக்குவரத்தும் பாதிப்பு!
நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, ரயில்வே கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயல்பாட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், ரயில் குறுக்கு வீதிகளின் பாதுகாப்பு கடவைகளை செயற்படுத்துவதிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மின் தடை காரணமாக ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
மின்சார விநியோகத்தை மீளமைக்க சில மணித்தியாலங்கள் எடுக்கும்
மின்சார விநியோகத்தை முழுமையாக மீளமைக்க சில மணித்தியாலங்கள் எடுக்கும் – பொறுமையாக இருக்குமாறு வேண்டுகோள்… நாடளாவிய ரீதியில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இலங்கை மின்சார சபை (CEB) இந்தப் பிரச்சினையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், மின்சாரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த இடையூறுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறார்கள். எவ்வாறாயினும், மின்சார விநியோகத்தை முழுமையாக…
-
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு
கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளார். மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரி வீதி சோதனை நடவடிக்கைக்கு சமூகமளிக்காததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது கையடக்க தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து…
-
இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம்!
அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அந்த நிறுவனம் நாட்டில் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதன்படி, சீனாவின் சினோபெக் நிறுவனம், அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ், மற்றும் அவஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனங்கள் நாட்டில் செயல்பாடுகளைத் தொடங்கியது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நாட்டில் தலா 150 எரிபொருள் நிலையங்கள் என்ற வகையில் 450 எரிபொருள் நிலையங்களை…
-
மலையகத்தில் நாங்கள் 70, 80 ஆண்டுகள் இருந்ததினால் தான் மலையக மக்கள் இன்றும் இருகின்றார்கள் – ஜீவன்
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதிய நீதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய தினம் (07) பாராளுமன்றத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,2024 ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கனிசமான நிதி ஓதுக்கீடானது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பெருந்தோட்ட மக்களுக்கு மட்டும் வீடமைப்பு, வைத்தியசாலைகள் ,பாடசாலைகள், வீதிகள் அபிவிருத்தி ஆகியன தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின்…
-
10 நாட்களில் புதிய திட்டம் ஆரம்பம்!
24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டம், இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அந்த சேவையை செயல்படுத்த தேவையான பயிற்சி பெற்ற அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பட்டியல், பொது சேவை ஆணைக்குழுவிற்கு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்தவுடன் 24…
-
ஓய்வு பெற்ற சாரதிகள், நடத்துனர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்!
5 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதற்காக பொது சேவை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.