Category: இலங்கை செய்திகள்
-
நுரைச்சோலை மின் நிலையம் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்?
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி, பெப்ரவரி 14 ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்பார்ப்பதாக மின்சார சபையின் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
-
புதிய வரிகளுடன் புதிய டொயோட்டா விலைகள் இதோ…!
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிகளின் மூலம் டொயோட்டா லங்கா தனது வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய எதிர்பார்க்கும் விலைகளை அறிவித்துள்ளது.வாகனத்தின் ஆரம்ப விலை பின்வருமாறு. • Lite Ace: Rs. 7.45 million • Wigo: Rs. 9.15 million •Lite Ace Van : Rs. 11.4 million • Raize: Rs. 12.25 million • Hilux (Single Cab) : Rs. 15.2 million • Hiace: Rs. 19.95 million…
-
நாட்டிற்கு இலட்சக்கணக்கில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்!
2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 332,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சமீபத்திய தரவு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம் 79,678 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்,பிப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் அதிக சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பாரப்பு..!
2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தௌிவூட்டுவதற்காக தொடர் நிகழ்ச்சித் திட்டங்களின் முதலாவது நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர்.அதன்படி, 2024 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பணம் அனுப்புதலில் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதாக…
-
பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி!
இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று (10) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்ணில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 168.41 புள்ளிகள் குறைந்து 16,566.27 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 32.69 புள்ளிகள் குறைந்து 4,959.45 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளன. அனைத்து பங்கு விலைக் சுட்டெண்ணில் ஏற்பட்ட சரிவுக்கு, செலிங்கோ ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பங்கு விலையில் ஏற்பட்ட 5.98% சரிவு மற்றும் LOLC ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ்…
-
பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்துள்ளதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் விஜயத்தில் இணைந்துள்ள அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுக்கும் பின்வரும் பதில்…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்ட மீட்பு
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பயண பொதிகள் பகுதிக்கு அருகில் 9 மி.மீ தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இது அவதானிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தோட்டாவை அவதானித்த சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இந்த தோட்டாவை மேலதிக விசாரணைக்காக இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
-
ஹிருணிகாவிற்கு பிடியாணை!
2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது. இக் குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந் நேரத்தில், இந்த முறைப்பாட்டில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை
-
பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா பதவி விலக வேண்டும்!
பாராளுமன்றத்தில் அமைச்சர் சந்திரசேகரன் அவர்களைப் பாரத்து… ‘கப்பல்’ என்றான சொல்லாடல்களைப் பாவித்து பேசிய வார்த்தைகளுக்காக…மக்களால் தெரிவு செய்யப்பட் பாராளுமன்ற உறுப்பினர் தாமாக பதவி விலகவேண்டும் அன்றேல் மக்களால் பதவி விலக வைக்கப்பட வேண்டும். இது, அதிலும் சிறப்பாக அவரின் தெரிவிற்கு காரணமான விருப்பு வாக்குளை வழங்கியவர்களால்.இதனை ஒரு பொதுவெளி அறை கூவலாக முன் வைக்கின்றேன்.பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மலையக மக்கள் மத்தியில் இருந்து மிகவும் விளிம்பு நிலையில் இருந்து தான் நம்பும் சித்தாந்தத்தின் அடிப்படையில் சமூகசேவை செயற்பாட்டாளராகி…
-
புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!
பொகவந்தலாவ பகுதியில் மின்பிறப்பாக்கியில் (ஜெனரேட்டர்) இருந்து வந்த புகையை சுவாசித்ததில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (09) முற்பகல் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பொகவந்தலாவ பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடைக்குள் ஒரு மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) இயக்கப்பட்டுள்ளது. மின்பிறப்பாக்கியிலிருந்து வந்த புகையை சுவாசித்ததில் கடையில் இருந்த நான்கு ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல்…