Category: இலங்கை செய்திகள்

  • தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

    தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

    பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தி, பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில்,பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என கூறிய நெதன்யாகு காசாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இஸ்ரேலியப் படைகளை குவிக்க உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார். மீதமுள்ள 76 பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோருகிறாரா, அல்லது இந்த சனிக்கிழமை…

  • நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காயின் விலை

    நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காயின் விலை

    நாட்டில் தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொழும்பு கோட்டையில் ஓரளவு பெரிய தேங்காய் ஒன்று 260 – 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுச் சந்தையில் நடுத்தர அளவிலான தேங்காய் ஒன்றின் விலை 240 – 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன் அளவில் மிகவும் சிறிய தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை அதிகரிப்பு காரணமாக கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

  • பிரதேச மக்கள் பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!

    பிரதேச மக்கள் பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!

    வாதுவ பொலிஸார் வாகன விபத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை தாக்கி கொன்றதாகக் கூறி கிட்டத்தட்ட 40 பேர் பொலிஸாருக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஆர்.எம். சமித டில்ஷான் என்ற 24 வயதுடையவர் ஆவார். மேலும் அப்பாவி குழந்தைகளின் குடும்பங்கள் சீரழிகின்றன. சவப்பெட்டியை வாங்கக்கூட பணம் இல்லை எனக் கூறி போரட்டம் நடத்தியவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இந்தநிலையில் வாதுவ பொலிஸாரின் பிரதான நுழைவாயில் வீதித் தடைகளினால்…

  • ரிஷாட் பதியுதீன் – பிரான்ஸ் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு..!

    ரிஷாட் பதியுதீன் – பிரான்ஸ் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு..!

    பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில் மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கொழும்பில் இடம்பெற்றது. மேலும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்படி அமைப்பின் பிரதிநிதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது, இலங்கையிலிருந்து பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுக்கு…

  • அரச சேவையில் நிலவும் 7, 456 வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம்!

    அரச சேவையில் நிலவும் 7, 456 வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம்!

    அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அதன்படி, அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் முறையைத் மீளாய்வு செய்து, அவசியமான முன்னுரிமைகள் மற்றும் காலப்பகுதியை அடையாளம் கண்டு, அதனுடன் இணைந்ததாக அத்தியாவசிய தேவைக்கு…

  • அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகரிடமிருந்து அறிவிப்பு..!

    அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகரிடமிருந்து அறிவிப்பு..!

    பிரதமர்  அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. மேலும் பாராளுமன்றத்தின் இவ் விசேட அமர்வானது சபாநாயகர் அவர்களினால் 2025.02.10ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2423/04 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அன்றையதினம் பாராளுமன்றம் மு.ப 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார். அன்றையதினம், உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்…

  • அநுர உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவரா?

    அநுர உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவரா?

    தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணியில் கட்டப்பட்ட புத்த கோயிலை இடிக்க முடியாது என்று அண்மையில் அநுர தெரிவித்துள்ள கருத்துக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழ் பகுதிகளில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் சிங்களமயமாக்கல் திட்டங்களை நிறுத்தும்படியும் அவர் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சிங்கள மக்களோ பௌத்த மக்களோ வாழாத இடங்களில் இலங்கை அரசாங்கமும் பௌத்த பிக்குகளும் இராணுவத்தினரை முன்னிறுத்தி…

  • கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க விஜயம்!

    கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க விஜயம்!

    கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு நிலையத்தின் நிலைமைகளை பார்வையிட்டு கலந்துரையாடினார். கிளீன் சிறிலங்கா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் குறித்த புகையிரத நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், பயணிகளுடனும் கலந்துரையாடினார். பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் நாடு முழுவதும் காணப்படுகிறது. அது போல கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊதியம் போதாது. அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும். அந்த பிரச்சினைக்கு மக்களுடனும் கலந்துரையாடி தீர்வு…

  • மின்வெட்டு குறித்து சஜித்தின் X பதிவு

    மின்வெட்டு குறித்து சஜித்தின் X பதிவு

    மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். சூரிய மின்…

  • புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்

    புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்

    சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் அதன் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை அடங்கும். மேலதிகமாக, மேல் மற்றும் தெற்கு மாகாணங்களைத் தவிர அனைத்து மாகாணங்களிலும் மாகாண குற்றப் பிரிவுகள் அமைக்கப்படும் என்றும் இலங்கைப் பொலிஸ் அறிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவுகளுக்கான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிதிக்…