Category: இலங்கை செய்திகள்

  • பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் : போலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

    பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் : போலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

    சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.கே.டி.பலிஸ்கர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிபி மெதவல அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து விசேட பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஏ.எதிரிமான்ன, காலி பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கே.ஜி.பி.பி…

  • முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பிடியாணை அவர் தலைமறைவு

    முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பிடியாணை அவர் தலைமறைவு

    முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் காணாமல் போயுள்ளதாகவும், அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். அவர் இருக்கும் இடம் குறித்த எந்தவொரு தகவலையும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தெரிவிக்குமாறு…

  • தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியாகும் என அரசாங்கம் அறிவிப்பு

    தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியாகும் என அரசாங்கம் அறிவிப்பு

    தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். ”அரச ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பின்னிலையில் உள்ளன. அவற்றை தொழில்நுட்பமயப்படுத்த வேண்டும். இதற்கான ஜப்பான் அரசு நன்கொடையை வழங்கியுள்ளது. ஏனைய ஊடகங்களுக்கு நிகராக அரச ஊடகங்களை கட்டியெழுப்ப வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு 100 புலமை…

  • இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 5 ஆம் பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இலங்கை வருவார் என்றும் இந்தப் பயணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேலும் பலப்படுத்தும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கு இடையிலான நில இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள்…

  • இலங்கைப் பொலிஸாருக்கு புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்”

    இலங்கைப் பொலிஸாருக்கு புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்”

    அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” (Speed Gun) இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வீதி விபத்துகளைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்பத்தும் நோக்கில் பொலிஸாருக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வாகனங்களை கண்காணிப்பதற்கு இந்த உபகரணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார். இவை சுமார் 1.2 கிலோமீற்றர் தூரத்திலிருந்து வாகனங்களைக் கண்டறிந்து, வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம்…

  • அமைச்சரவை வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அனுமதி

    அமைச்சரவை வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அனுமதி

    வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்தத் தேசிய உற்பத்தி இலக்குடன் கூடியதாக நிலைதளராத பொருளாதார விருத்தி மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார, சமூக, சுற்றாடல் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும்…

  • மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை சமர்ப்பிப்பு

    மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை சமர்ப்பிப்பு

    ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (03) தொடர்புடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தைத் தவிர, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகியவை கூட்டாக இணைந்து தொடர்புடைய வாய்மொழி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளன. இந்த அறிக்கை கடந்த ஆண்டு நடைபெற்ற அமைதியான தேர்தல்களையும் தற்போதைய…

  • முஸ்லிம் தீவிரவாதக் குழு கிழக்கு மாகாணத்தில் உள்ளதை உறுதிப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ

    முஸ்லிம் தீவிரவாதக் குழு கிழக்கு மாகாணத்தில் உள்ளதை உறுதிப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ

    கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு இருப்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார். பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் அந்தக் குழு தொடர்பில் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்த விவகாரம் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் வழங்கினார்.

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என கூறப்பட்டுள்ளது. அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் உட்பட்டோரை சந்திக்கவுள்ளார். மேலும், சம்பூருக்கு மின் திட்டமொன்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் வருகையையொட்டி…

  • விலங்குகள் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டம்  நாமல் கருணாரத்ன தெரிவிப்பு .

    விலங்குகள் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டம் நாமல் கருணாரத்ன தெரிவிப்பு .

    நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் குரங்குகள், மயில்கள் மற்றும் மரஅணில்களின் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களில் சுற்றித் திரியும் வனவிலங்குகளை எண்ணி தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதற்காக 5 நிமிடங்கள் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும்…