Category: இந்திய செய்திகள்
-
இலங்கை – இந்தியாவுக்கு இடையில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆலோசனை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இருநாட்டு பாதுகாப்புச் செயலாளர்களும் கலந்துரையாடியுள்ளனர். பாதுகாப்பு செயலாளர் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்கை பெங்களூருவில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில், சட்டவிரோத மீன்பிடித்தலை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கான பயிற்சிகளை மேம்படுத்துதல் உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய துறைகள் குறித்து இருவரும் கவனம் செலுத்தினர். இருதரப்பு இராணுவ…
-
இந்தியாவிற்கு திருப்பி அனுப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாதிகள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அமெரிக்க அரசு நேற்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டவிரோத குடியேறிகள் பட்டியல் கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினரை உள்ளடக்கி…
-
இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை…
-
ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி!
மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு வழங்கியமைக்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendira Modi) நன்றி தெரிவித்துள்ளார்.தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்திய வரலாற்றில் இது ஒரு சாதனை எனவும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, கடந்த பத்தாண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
-
திருகோணமலையில் விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்!
திருகோணமலை (Trincomalee) தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்றையதினம் (23.04.2024) குறித்த மாணவி வீதியை கடக்க முற்பட்ட போது வான் ஒன்று மோதியதால் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கண்டியை (Kandy) சேர்ந்த 32 வயதுடைய வான் சாரதி திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
-
வவுனியாவில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் கடந்த 3 ஆம் பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.…
-
கொழும்பு பிரதான மார்க்கத்தில் தடம்புரண்ட தொடருந்து!
மருதானை மற்றும் தெமட்டகொடை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை இலங்கை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதனால் பிரதான தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மஹோ நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
அமலாக்கத்துறை, ஐ.டி, சி.பி.ஐ.தான் பிரதமர் நரேந்திரமோடியின் குடும்பம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னை : ‘அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. தான். பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில செய்தி நாளேடு. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டுவிட்டன.
-
பிரசாரத்தின் போது கடையில் கூழ் குடித்து யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்திய தமிழிசை
சென்னை, தென்சென்னையில் பிரசாரத்தின் போது கடையில் கூழ் குடித்து யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தினார் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை. தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இவர் தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார் இயக்குநர் அமீர்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள தேசிய போதை பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி டெல்லியில் கைது செய்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன்…