Author: Kavaskar
-
நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார்
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்தார். அதன்படி, அவர் குற்றப் புலனாய்வுத் துறையிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
மீண்டும் டொரொண்டோவில் பனிப்பொழிவு எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வாரத்தின் தொடக்கத்தில் வெப்பமான காலநிலையை எதிர்கொண்ட டொரொண்டோ, நாளை முதல் மீண்டும் பனிப்பொழிவும் உறைபனித் தரையும் எதிர்கொள்ளக்கூடும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 3 பாகை செல்சியசாக இருக்கும். ஆனால், இரவு 0 பாகை செல்சியதாக வரை குறையும். மாலை நேரத்தில் 2 – 4 சென்றி மீற்ர் வரை பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. இது, இந்த மாதம் ஆரம்பத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பனிப் புயல்களில் 50 சென்றிமீற்றருக்கும் அதிகமான பனி…
-
வடக்கு அல்பெர்டாவில் குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது.
வடக்கு அல்பெர்டாவில் கடந்த வாரம் ஏழு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதாகியுள்ளார். இந்த சந்தேக நபர் மீது பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 19ம் திகதி இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அவசர சேவை பிரிவிற்கு தகவல் வழங்கபட்டது. ஒரு குழந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோல், இன்னொரு குழந்தை சிறிய கத்திக் காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளது. சம்பவத்துடன்…
-
கனடாவில் நகைக் கடை கொள்ளை முயற்சியை மேற்கொண்டவர்களை தேடும் பொலிஸார்
கனடாவின் வாகன் நகரில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கடந்த வாரம் நடந்த ஆயுத முனையில் கொள்ளை முயற்சியை மேற்கொண்ட நான்கு பேரை யோர்க் போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 24ஆம் திகதி இரவு 9 மணியளவில் சென்வே பாலிவர்டு மற்றும் ஹைவே 427 பகுதியில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கொள்ளை முயற்சி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை மூடப்பட்டதன் பின்னர் வெளியே வந்த ஒருவரிடம் நான்கு பேரும் கொள்ளையிட முயன்றுள்ளனர். குறித்த நபர் விரைவாக…
-
11 ஆண்டுகளாய் தொலைந்துபோன விமானத்தை தேடும் மலேசியா
11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் இந்தியப் பெருங்கடலில் தொடங்கியுள்ளன. Ocean Infinity நிறுவனத்தின் ஆழ்கடல் ஆதரவுக் கப்பல் Armada 7806, பெர்த் (Perth) கடற்கரையிலிருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவைச் சென்றடைந்திருப்பதாக ஆஸ்திரேலிய, பிரிட்டன் ஊடகங்களின் அறிக்கை கூறுகிறது. இது தொடர்பில் அமெரிக்க, பிரிட்டன் நிறுவனங்களின் கடலடி தானியக்க இயந்திரங்கள் இந்தியப் பெருங்கடலின் தரைப் பகுதியை ஆராயத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது . 15,000 சதுர கிலோ மீட்டர்…
-
புதிய விசா விதிமுறைகள் கனடாவில்
கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் இலங்கையர்கள், இந்தியர்கள் உட்பட கனடாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பாக புதிதாக கனடாவுக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் குடியேற நினைப்பவர்களுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி பயிலும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் விசா நிலையை, எந்த நேரத்திலும் மாற்றுவதற்கான அதிகாரத்தை கனடா…
-
சுமார் 30 பேரிடம் கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கொலை நடந்த புதுக்கடை நீதிமன்றத்தில் இருந்தவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும்அ பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தக் கொலை தொடர்பாக இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய…
-
ரஷ்யா-உக்ரைன் போர் விவாதங்கள்
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், உக்ரைன் போரில் அமைதி ஒப்பந்தம் சரணடைவதாக இருக்கக்கூடாது என்றும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாமல் போர்நிறுத்தத்தை அர்த்தப்படுத்தக்கூடாது என்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி விரைவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க உள்ளதாகவும்…
-
இந்தியா – இலங்கை பெற்றோலிய குழாய் இணைப்புத் திட்டம்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள பல்துறை பெற்றோலிய குழாய் இணைப்பு, அரசியல் ரீதியாக சாத்தியமானதாக இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே நிறைவேறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டபிளியூ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை இரு தரப்பினரும் தற்போது மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “திட்டத்தின் சாத்தியக்கூறுகளை நாங்கள் மதிப்பிடுவோம். அது சாத்தியமானால் மட்டுமே முன்னேற்றம்…
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறின
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இருந்து பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நேற்று பங்களாதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பின்னர் இந்த இரு அணிகளும் முதல் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. நேற்றையப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்களை குவித்திருந்தனர். பதிலுக்கு களம் இறங்கிய நியூசிலாந்து…