Author: Kavaskar
-
டிரம்பை சந்திக்கவிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து உக்ரைனின் கனிம வளங்களைப் பங்கிட்டு கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அமெரிக்கா, ரஷ்யாவுக்கு ஆதரவளித்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி பைடன் உக்ரைனுக்கு அளித்து வந்த நிதி மற்றும் ராணுவ உதவிகளையும் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவுடன் பங்கிட்டுக் கொண்டால் மட்டுமே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்…
-
அமெரிக்க ஜனாதிபதி கனடா மற்றும் மெக்ஸிக்கோ மீது வரி விதிக்க திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 வீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், சீனாவிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு 10% விதிக்கப்படும் வரியை இரட்டிப்பு செய்யப் போவதாகவும் அவர் அறிவித்தார். ட்ருத் சோஷியல் (Truth Social) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவுக்குள் பென்டானில் (Fentanyl) போன்ற மயக்க மருந்துகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும், இதை தடுக்கவே இந்த வரிகளை அமல்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கொடூர நிலைமை அமெரிக்காவை தொடர்ந்து…
-
இன்று 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம்
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கான செலவினத் தலைப்புகளில் இன்று (28) குழு நிலை விவாதம் இடம்பெறுவுள்ளன. குழு நிலை விவாதம் நேற்று (27) தொடங்கியது. இது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறும்.
-
நேபாளத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே கடும் பீதி
நேபாளத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டாவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததை உறுதிப்படுத்தியிருந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நேபாளத்தின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் பொது மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் மட்டும் ஏற்படவில்லை. இந்தியா மற்றும் திபெத்தின்…
-
முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பிரதமர் விளக்கம்
முன்னாள் ஜனாதிபதிகள் தமது நிர்வாகத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விளக்கினார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை (27) உரையாற்றும் போதே அவர் இது தொடர்பில் வெளிகொணர்ந்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்கு 3572 மில்லியன் ரூபாவும், 2015 ஆம் ஆண்டு முதல் முதல் 2019ஆம் ஆண்டு…
-
கனடா அதிகளவு புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதை தீவிரப்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு கனடா மிக அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளதாகவும், அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் அனேகமானவர்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் எனவும் தெகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கனடா கடந்த வருடம் அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது,ஒருதசாப்தகாலத்திற்கும் மேற்பட்ட காலத்தில் அதிகளவானவர்கள் வெளியேற்றப்பட்டமை கடந்த வருடம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் வரை கனடா நாடுகடத்தியவர்களின் எண்ணிக்கையை வைத்துபார்க்கும்போது 2015ம் ஆண்டின் பின்னர் கடந்த வருடமே கனடா அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளமை புலனாகின்றது. நாடு…
-
விமானப்படை உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விசேட சந்திப்பு
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (27) சந்திப்பானது இடம் பெற்றது. இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், வலுவான விமானப் படையாக இலங்கை விமானப்படையை வலுப்படுத்தல், இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னெடுப்புகளுக்காக விமானப்படையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இம்முறை வரவு செலவு திட்டத்தில் இலங்கை…
-
விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த அமெரிக்க யுவதிகள்
கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யுவதிகள் அமெரிக்காவை சேர்ந்வர்கள் என கூறப்படுகின்றது. அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள் பெலிசேவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சென் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர்கள் மூன்று பேரும் ஹோட்டல்…
-
ஒன்றாரியோ தேர்தல் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு
ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 140 ஆண்டுகளில் முதல் முறையாக, பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே, கடுமையான பனிநிலையால் வாக்களிப்பு விகிதம் குறையுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒட்டாவா, டொரொண்டோ உள்ளிட்ட நகரங்களில் பனிப் பிரச்சனை தொடர்பாக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து பணிபுரிந்துவருகிறோம் என ஒன்றாரியோ தேர்தல் நிறுவனத்தின் ஊடக…
-
மேலும் 65 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 65 பேர் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்படும் சட்டவிரோத குடியேறிகளை தற்காலிக முகாம்களில் தங்க வைக்க மத்திய அமெரிக்க நாடான…