Author: Kavaskar

  • ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

    ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

    ஜப்பானில் சிறப்புத் திறன் கொண்ட பணியாளர் (SSW) திட்டத்தின் கீழ், தாதியர் பராமரிப்புத் துறையில் இலங்கையர்கள் பல வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த வேலைகளுக்குத் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் தொழிலாளர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பணியகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஐ.எம். ஜப்பான் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 18-35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலை வாய்ப்புகளை இலவசமாகப் பெற தகுதி…

  • கனடா 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடா திட்டம்.

    கனடா 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடா திட்டம்.

    கனடா இந்த ஆண்டு ஆசிரியர்களை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை கடனா வெளியிட்டிருக்கிறது. கனடா 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடா திட்டமிட்டுள்ளது. கனடாவின் தேவைக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் பணியாற்ற வெளிநாட்டினர் வரவேற்கப்படுகின்றனர். அதன்படி இந்த ஆண்டு, ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான உதவியாளர்கள், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியாளர்கள், சமையல்காரர் ஆகியோரி ந் தேவை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்…

  • கனடியர்கள் அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம்.

    கனடியர்கள் அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம்.

    அமெரிக்காவிலிருந்து கனடாவில் குடிபெயர்ந்தவர்கள், தங்களது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம் காட்டுவதாகத் கூறப்படுகின்றது. குடியேற்ற சட்டத்தரணிகள் இது தொடர்பிலான விடயங்களை அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களில் இதற்கான விண்ணப்பங்கள் 50% உயர்வு கண்டுள்ளன. அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய முயற்சி செய்யும் பலர் போல அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வாழ்வது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படுவது போல இல்லையென்று சிலர் தெரிவித்துள்ளனர். 2025 அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி…

  • ஜனாதிபதியின் வெளிநாட்டு பயண செலவில் சந்தேகங்கள் இருப்பின்  அரசாங்கத்திற்கு சவால் விட முடியும் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

    ஜனாதிபதியின் வெளிநாட்டு பயண செலவில் சந்தேகங்கள் இருப்பின் அரசாங்கத்திற்கு சவால் விட முடியும் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

    ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்க்கட்சியினர் அது தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து அரசாங்கத்திற்கு சவால் விட முடியும் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். பாதாள உலகக் குழு என்பது எங்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒன்று அல்ல, அரசியல் தொடர்புகளுடனேயே இவை ஆரம்பிக்கப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கருத்து தெரிவித்த நாமல் கருணாரத்ன, “தற்போது அரசாங்கம் குற்றம் சுமத்துபவர்களே…

  • ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

    ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோர் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே வெள்ளையை மாளிகையில் நடந்த சந்திப்பு கடுமையான வார்த்தை மோதல்களில் முடிந்து உள்ளது. வெள்ளை மாளிகை சந்திப்பின்போது அமெரிக்கஜனாதிபதி டிரம்பும் துணை ஜனாதிபதி ஜேடிவான்ஸ் ஜெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்தார்கள் எனவும் உக்ரைன் ஜனாதிபதி பிரச்சார பயணங்களில் ஈடுபடுகின்றார் என குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  • சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வடகொரியா நடவடிக்கை.

    சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வடகொரியா நடவடிக்கை.

    வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வடகொரியா நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. வடகொரியாவில் ஏற்படும் எந்தவொரு நிகழ்வும் வெளி உலகத்துக்கு தெரியாத வகையில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வடகொரியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி இருக்க…

  • நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு.

    நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு.

    நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றும் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. என்றாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத சலுகையை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கூறியுள்ளது. மூன்று சதவீத சலுகையை இரத்து செய்யும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய…

  • மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு

    மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு

    பாகிஸ்தானிலுள்ள மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்துடன்,10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் நடத்தும் மதரஸா வளாகத்தில் மசூதி அமைந்துள்ளது. இந்த மதரஸாவில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் வளாகத்தில் கூடியிருந்த நிலையில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு

    தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு

    தென்கொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வந்தது. இதனால் சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே குறைந்தது. எனவே அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அறிவுறுத்தியது. ஆனால் அதிகரிக்கும் கல்விச்செலவு, கலாசார மாற்றத்தால் இளைஞர்கள் பலரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனையடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சத்து…

  • சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட இலங்கை நிதி வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு

    சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட இலங்கை நிதி வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு

    சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கையின் 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. மூன்றாவது மதிப்பாய்வின் மூலம் 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வசதி நான்காவது தவணையாக இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம், சர்வதேச நாணய நிதியம் இன்றுவரை இலங்கைக்கு வழங்கிய மொத்த நிதி உதவி 1.34 பில்லியனை எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சமூக…