Author: Kavaskar

  • மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை சமர்ப்பிப்பு

    மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை சமர்ப்பிப்பு

    ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (03) தொடர்புடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தைத் தவிர, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகியவை கூட்டாக இணைந்து தொடர்புடைய வாய்மொழி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளன. இந்த அறிக்கை கடந்த ஆண்டு நடைபெற்ற அமைதியான தேர்தல்களையும் தற்போதைய…

  • முஸ்லிம் தீவிரவாதக் குழு கிழக்கு மாகாணத்தில் உள்ளதை உறுதிப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ

    முஸ்லிம் தீவிரவாதக் குழு கிழக்கு மாகாணத்தில் உள்ளதை உறுதிப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ

    கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு இருப்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார். பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் அந்தக் குழு தொடர்பில் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்த விவகாரம் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் வழங்கினார்.

  • இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

    இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

    இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவுடன் இன்று (04) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், எதிர்காலத்தில் இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறாத நிலையை அடைவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், முந்தைய நெருக்கடியின்…

  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி காணொலியொன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு நேற்று (02) லண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டை அடுத்து ஸெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து காணொலியொன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த காணொலியில் “ஐரோப்பாவிடமிருந்து தெளிவான ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம். அமைதி உண்மையானதாக இருக்க, உக்ரைனுக்கு உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை எனும் முக்கிய பிரச்சினையில் அனைவரும்…

  • ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக நிர்ணயித்த டிரம்ப்

    ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக நிர்ணயித்த டிரம்ப்

    அமெரிக்காவில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான ஆங்கிலம் பேசப்பட்ட போதிலும் காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி…

  • தண்ணீர் ஒவ்வாமையால் அவதிப்படும் பிரித்தானிய பெண்

    தண்ணீர் ஒவ்வாமையால் அவதிப்படும் பிரித்தானிய பெண்

    தண்ணீரால் ஏற்படும் அரியவகை ஒவ்வாமையால் அவதிப்படுவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த கெண்டல் என்ற 25 வயதுடைய பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரியவகை ஒவ்வாமையால் இந்தப் பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாத்திரமே குளிக்கிறாராம் அதுமாத்திரமல்லாமல் சாதரணமாக தண்ணீரில் கை கழுவினாலும் வலி மற்றும் எரிச்சல் அதிகரிக்குமாம். குறித்தப் பெண்ணுக்கு இந்த ஒவ்வாமையானது 15 வயதில் இருந்து இருப்பதாகவும் இதற்கான சரியான மருந்து கண்டுப்பிடிக்காத காரணத்தால் வைத்தியர்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

  • கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம்

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம்

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் அதிகாலை 5:02 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது முதலில் 4.6 ரிக்டர் அளவிலாக பதிவு செய்யப்பட்டது, பின்னர் 4.1 ஆக திருத்தப்பட்டது. விக்டோரியா, வாங்கூவர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த…

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என கூறப்பட்டுள்ளது. அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் உட்பட்டோரை சந்திக்கவுள்ளார். மேலும், சம்பூருக்கு மின் திட்டமொன்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் வருகையையொட்டி…

  • கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க  காரணம்  அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரே

    கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க காரணம் அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரே

    கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில் காரணமாக அமைந்தது அந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர்தான் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “அப்போது 2022 அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணம் என்ன? அந்த நேரத்தில் அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர், நாட்டில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே எரிபொருள் இருக்கும் என்று கூறினார். பின்னர் மக்கள் பீப்பாய்களாக எரிபொருளை பெற்றுக்கொண்டனர். கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில்…

  • விலங்குகள் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டம்  நாமல் கருணாரத்ன தெரிவிப்பு .

    விலங்குகள் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டம் நாமல் கருணாரத்ன தெரிவிப்பு .

    நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் குரங்குகள், மயில்கள் மற்றும் மரஅணில்களின் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களில் சுற்றித் திரியும் வனவிலங்குகளை எண்ணி தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதற்காக 5 நிமிடங்கள் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும்…