Author: Kavaskar

  • ஐரோப்பாவில் புகை குண்டுகளை வீசி எதிர்க்கட்சியினர் தாக்குதல்

    ஐரோப்பாவில் புகை குண்டுகளை வீசி எதிர்க்கட்சியினர் தாக்குதல்

    ஐரோப்பாவில் செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்தனர். மார்ச் 04 ஆம் திகதி கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி…

  • அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க மக்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம் என தெரிவிப்பு

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க மக்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம் என தெரிவிப்பு

    அமெரிக்க மக்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். இதன்போது எதிர்க்கட்சிகளிடன் கடும் அமளிக்கிடையே ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றவுடன் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நினைவாக்க உழைத்து வருகிறோம். கடந்த 6 வாரங்களில், நான் கிட்டத்தட்ட 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளேன், 400க்கும் மேற்பட்ட…

  • டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் காரணமாக நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம், மற்றும் இயற்கை உறைபனி மேற்பரப்புகளில் நுழைய வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் ஒரு சிறப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மழை மற்றும் மிதமான வெப்பநிலைகள் காரணமாக நகரின் சில பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. தேசிய வானிலை நிறுவனத்தின் தகவலின்படி, செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை 15 முதல் 25…

  • அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என கனடா திட்டவட்டம்

    அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என கனடா திட்டவட்டம்

    அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என கனடா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜன.,20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின்…

  • யோஷித்த ராஜபக்சவின் பாட்டி  கைது

    யோஷித்த ராஜபக்சவின் பாட்டி கைது

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 5 ஆம் பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இலங்கை வருவார் என்றும் இந்தப் பயணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேலும் பலப்படுத்தும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கு இடையிலான நில இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள்…

  • இலங்கைப் பொலிஸாருக்கு புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்”

    இலங்கைப் பொலிஸாருக்கு புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்”

    அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” (Speed Gun) இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வீதி விபத்துகளைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்பத்தும் நோக்கில் பொலிஸாருக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வாகனங்களை கண்காணிப்பதற்கு இந்த உபகரணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார். இவை சுமார் 1.2 கிலோமீற்றர் தூரத்திலிருந்து வாகனங்களைக் கண்டறிந்து, வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம்…

  • வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து கனடாவில் எச்சரிக்கை

    வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து கனடாவில் எச்சரிக்கை

    கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் நோய்த் தொற்றுக்கு இலக்கான ஒருவர் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹமில்டன் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் பதிவான முதல் வௌவால் ரேபிஸ் தொற்று இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது. வௌவால்கள் மற்றும் ஏனைய விலங்குகளின் அருகாமைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சில விலங்குகளின் ஊடாக இந்த ரேபீஸ் வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரேபீஸ் தொற்றினால்…

  • அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு இனி அதிக வரி விதிப்பு

    அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு இனி அதிக வரி விதிப்பு

    சீனா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அமெரிக்கா-கனடா வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மார்ச் 4ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் வரி…

  • அமைச்சரவை வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அனுமதி

    அமைச்சரவை வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அனுமதி

    வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்தத் தேசிய உற்பத்தி இலக்குடன் கூடியதாக நிலைதளராத பொருளாதார விருத்தி மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார, சமூக, சுற்றாடல் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும்…