Author: Kavaskar
-
இலங்கை மற்றும் மாலைதீவு இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்(Masood Imad) இடையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அடைந்த வெற்றிகளுக்கு மாலைதீவு குடியரசின் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.…
-
டிரம்ப் மீண்டும் 1,600 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய உத்தரவு
அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் (யூஎஸ்ஏஐடி) பணிபுரியும் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் பணிபுரியும் 4,500-க்கும் மேற்பட்ட சர்வதேச மேம்பாட்டு நிறுவன ஊழியர்களை ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பில் அனுப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாகிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக சில ஊழியர்களை தவிர்த்து அனைவரையும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு வருகி…
-
உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது
பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொதுவில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா…
-
இன்று இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு
அநுர அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்ப்பை இன்று மாலை 6 மணியளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, இரண்டாவது வாசிப்பிற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதியமைச்சராக பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன்படி, பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இன்று…
-
ஆஸ்திரேலியா டெலிகிராமிற்கு அபராதம்
அவுஸ்திரேலியாவின் சுயாதீன ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம் (eSafety), ஐந்து மாதங்களுக்கும் மேலாக அதன் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் செய்ததற்காக டெலிகிராமுக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதித்துள்ளது. நாட்டின் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தங்கள் ஒழுங்குமுறை இணக்கத்தை அளவிடுவதற்காக மெட்டா, வான்ஸ்அப், கூகுள், ரெடிட், எக்ஸ் மற்றும் டெலிகிராமிருந்து வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை eSafety கடந்த மார்ச் மாதம் கோரியிருந்தது. ரெடிட் மற்றும் டெலிகிராம் ஆகியவை சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் (CSAM),…
-
புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நியூசிலாந்தில்
நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. வெலிங்டனிலுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது, அந்த அறிக்கையில், புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயம் லெவல் 8, எண். 38, பெதெரிக் டவர், வாரிங் டெய்லர் தெரு, வெலிங்டன் சென்ட்ரல் எனும் முகவரியில் அமைந்துள்ளது. பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 மணி முதல்…
-
அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும்
ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி வெற்றி பெற்றுள்ளது. ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) கூறுகையில் அமெரிக்கா ஐரோப்பிய கண்டத்தின் தலைவிதி குறித்து பெருமளவிற்கு அலட்சியமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜேர்மனியின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் (Friedrich Merz) , ஐரோப்பா சுதந்திரமாகவேண்டும் என…
-
லண்டனில் தையிட்டியில் பௌத்த விகாரையை உடனடியாக அகற்ற வேண்டுமென கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கை இராணுவத்தினரால் சட்டவிரோதமாக தமிழரின் பூர்வீக நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை நீக்க கோரி பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் முன்பாக மாபெரும் போராட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. எமது தாயக நிலப்பரப்பான யாழ்ப்பாணம் – தையிட்டியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவை உலக நாடுகளுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றதுடன், இதனை ‘தமிழீழ சுயநிர்ணய…
-
பிரசன்ன பெரேரா ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமனம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. பிரசன்ன பெரேரா பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு, களனி பல்கலைக்கழகத்தில் வெகுசன தொடர்பாடல் பட்டப்பின் படிப்புக்கான பட்டத்தையும் பெற்றுள்ளார்.
-
அமெரிக்காவில் இருந்து பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
அமெரிக்காவில் இருந்து பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள், நேற்று (பிப்ரவரி 23) இரவு டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவால் பனாமாவிற்கு நாடுகடத்தப்பட்ட 299 சட்டவிரோதக் குடியேறிகளில் இந்த 12 இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டிருந்தனர். அமெரிக்காவில் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை அவரவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும்…