Author: ped36
-
கனடாவில் சிறுவனுக்கு வைன் விற்று சிக்கலில் மாட்டிய சங்கிலி நிறுவனம்!
கனடாவில் சிறுவன் ஒருவனுக்கு வைன் விற்பனை செய்த பிரபல நிறுவனமொன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி பல்பொருள் விற்பனை சங்கிலி நிறுவனங்களில் ஒன்றான லொப்லொவ் (Loblaws) நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமது நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் 16 வயது சிறுவனுக்கு வைன் விற்பனை செய்ததனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவனுக்கு வைன் விற்பனை செய்த குற்றத்திற்காக ஏழாயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம்…
-
அல்பேர்ட்டாவில் வெளிநாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பும் நிரந்தர வதிவுரிமையும்!
மாகாணத்தில் விருந்தோம்பல் தொழிற்துறையில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. எதிர்வரும் 2035ம் ஆண்டளவில் மாகாணத்தின் சுற்றுலா கைத்தொழிற்துறையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அல்பேர்ட்டா மாகாணம் இதற்கென பிரத்தியேகமான ஓர் குடிவரவு திட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. விருந்தோம்பல் தொழிற்துறைசார் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கனடாவில் ஏற்கனவே தற்காலிக அடிப்படையில் சுற்றுலாத்துறை தொழில்களில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டுப் பிரஜைகள், நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.…
-
வெடுக்குமாறிமலை 3000ம் ஆண்டு பழமையான தமிழர்களின் ஆலயம்
வெடுக்குமாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆயலம் 3000ம் ஆண்டு பழமை வாந்தது. அப்பகுதியை சூழ தமிழர்களான நாகர்களே வாழ்ந்துள்ளதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிப்பதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய சிறிதரன், ”பழமையும் பாரம்பரியமும் கொண்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் தமிழ் பிராமிய கல்வெட்டுகள் மற்றும் வட்டெழுத்துகளை காண முடியும். வெடுக்குமாறிமலையின்…
-
கனடா செல்ல ஆசைப்படுகிறீர்களா?: தொழில் வாய்ப்பை வழங்கும் முக்கிய மாநிலம்
உலகில் மிகப்பெரிய நாடுகளில் கனடாவும் ஒன்றும். இங்கு நிலப்பரப்புக்கு ஏற்ப மக்கள் தொகை இல்லை என்பதுடன், பலநாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் இங்கு தொழில்துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவுக்கு சென்றால் அகதி அந்தஸ்து கிடைப்பது உறுதியென அங்குள்ள புலம்பெயர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பல்வேறு சட்டவிரோதமான வழிகளை பின்பற்றியாவது கனடாவுக்கு செல்ல வேண்டுமென்பதில் உலகளாவிய ரீதியில் பலரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் வெளிநாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் நிரந்தர வதிவுரிமை பெறுவது குறித்த ஒரு…