Author: ped36
-
மைத்திரி: ஆறு மணித்தியாலம் சி.ஐ.டியிடம் வாக்குமூலம்! யார் சூத்திரதாரி என தெரியும் என்கிறார்!
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் வெளியேறியுள்ளார். விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து பிரதான நுழைவாயிலில் வெளியேறாது மற்றுமொரு வழியே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று காலை 10.30 மணியளவில் சாட்சியம் வழங்க அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார்.
-
தமிழினத்திற்கு எதிரான கட்சி பாஜக என்கிறார் ஸ்டாலின்: ஓரவஞ்சனை அரசாக செயல்படுகிறது
தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் எதிரான கட்சி பாஜக என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு இன்னும் நாசமாகிவிடும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். பாஜக அரசு ஓரவஞ்சனையாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இன்றைய தினம் இந்த அறிமுக பிரசாரம் இடம்பெற்றது. திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து…
-
புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்
அண்மையில் ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த சில தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் இணைந்து புதுடில்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள். அச்சந்திப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள். அச்சந்திப்புகளில் தாயகத்திலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு ஆதீனத் தலைவரும் பங்கு பற்றினார்கள். காவியுடை அணிந்த ஒரு ஆதீன முதல்வரைக் குழுவுக்குள் உள்ளடக்கியதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை மேலும் நெருங்கலாம்,அதன் மூலம் இந்தியாவின் ஆளுங்கட்சியாகிய பாரதிய ஜனதா கட்சியின்…
-
ஈழத்தமிழர்க்கான தீர்மானமும், உலக மனித உரிமை பிரகடனமும்
உலகளாவிய ரீதியில் மனிதர்களை சாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடு காட்டி வேறுபடுத்தக்கூடாது. தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வகை செய்வதே மனித உரிமையாகும். இத்தினமே மனித உரிமை தினமாக 1950 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இன்றைய மனித உரிமை தினத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பலரும் மறந்து விட்டனர். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது…
-
இலங்கை – இந்திய தேர்தலும் தமிழ் தேசியமும்
தேர்தல் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு விடியப் போகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 2024 தேர்தல் நடக்கவிருப்பது திட்டவட்டமானது. நடக்கவிருக்கும் இந்த மூன்று நாடுகளின் தேர்தல்களிலும் அமெரிக்காவின் தேர்தல் ஆனது இலங்கையிலோ அல்லது ஈழத் தமிழர்களின் அரசியலிலோ எத்தகைய தாக்கத்தையும் செலுத்த மாட்டாது. ஆனால் இந்தியாவின் தேர்தல் என்பது இலங்கைத் தேர்தலில் செல்வாக்கு செலுத்தக் கூடியது. ஈழத் தமிழர்களின் அரசியலிலும் அதன் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியது. இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல், இந்திய தேர்தல் ஆணையத்தின் நிகழ்ச்சி நிழலின்படி…
-
என்றும் மரணிக்காத காசாவின் குரல் – ரிவாட் அலாரீர் :
காசா பல்கலை பேராசிரியர் இஸ்ரேலால் படுகொலை ! இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட கவிஞர், பேராசிரியர் னுச.ரிவாட் அலாரீரை (னுச. சுநகயயவ யுடயசநநச) உலகம் வாழ் கவிஞர்களும், பாலஸ்தீனியர்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர். புகழ்பெற்ற கவிஞர், கல்வியாளர் காசாவின் குரலாக என்றும் மரணிக்காத குரலாக விளங்கியவர். என்றும் மரணிக்காத காசாவின் குரல் : பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் (சுநகயயவ யுடயசநநச) கடந்த புதன் இஸ்ரேல் காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.…
-
ஈழத்தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது…
ஈழத்தமிழினம் என்றைக்கும் ஒரு இனமாக அல்லது ஒரு சமூகமாக ஒற்றுமையாக ஒரே கொள்கையுடன் – ஒரே குறிக்கோளுடன் சிந்தித்ததும் கிடையாது ஓரணியாக பயணித்ததும் கிடையாது என்பதற்கு பல வரலாற்று நிகழ்வுகளும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அது இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. ஈழத்தமிழரின் அகிம்சை போராட்டங்களாக இருக்கட்டும் ஆயுத போராட்டமாக இருக்கட்டும் அனைத்து போராட்டங்களும் நலிவடைந்து போனதற்கு மேற்கூறிய இனத்தின் குணாதிசயங்களே காரணமாக இருந்திருக்கின்றன. ஆனாலும் இத்தனை படிப்பினைகளை கற்றபின்னரும் ஒரு இனம் மீண்டும் மீண்டும் அந்த தவறுகளை செய்துகொண்டிருப்பது…
-
மாற்றுத்தலைமைக்கான அவசியம்
ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட விவாதம் ஒன்று அந்நாட்டின் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இடம்பெறிருக்கிறது.மேற்படி விவாதத்தில் ஈழத் தமிழர்கள் தொடர்பிலும் அவர்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, வன்முறை மற்றும் இனப்படுகொலையின் சுழற்சியுடன் துரதிர்ஷ்டவசமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இன்னும் உயிர் பிழைத்த தமிழர்களைத் துன்புறுத்துவதாக தெரிவித்தார். மேலும்,இலங்கையில், இனப்படுகொலை தமிழ் சமூகத்தின் மீது பேரழிவு விளைவை ஏற்படுத்தியது.…
-
இந்தியா-சீனாவின் பனிப்போரும் ஈழத்தமிழரின் எதிர்காலமும்
ஈழத்தமிழர்களை ஸ்ரீலங்காவின் பேரினவாதிகள் மாத்திரமல்ல சர்வதேச நாடுகளும் மிரட்ட ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக சீனா – இந்தியாவின் பனிப்போர் ஈழத்தமிழருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் தற்சமயம் சூழத்தொடங்கியிருக்கிறது. ஈழத்தமிழரின் மிக முக்கிய தளமாக விளங்கும் பாக்கு நீரிணை இந்தியா மற்றும் சீனாவின் பலப்பரீட்சைக் களமாக மாறிவருகிறது என்ற செய்தி அண்மைக்காலமாக அடிபடுகிறது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அண்மைக்காலமாக சீனா தமிழர் தாயகம் தொடர்பில் அதிக கரிசனையை கொண்டு செயற்படுவதாக தெரிகிறது. கடந்தவாரம் கூட இலங்கைக்கான…
-
முள்ளிவாய்க்கால் முதல் காஸா வரை சர்வதேசத்தின் அலட்சியமும் தோல்வியும்
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் மனித பேரவலம் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசு நடத்திய படுகொலைகளை நினைவுபடுத்துகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய படுகொலையை தமிழர்கள் மட்டுமல்ல உலக மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசிய இலங்கை இராணுவம்இ பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று தனது கொலை வெறியை தீர்த்துக்கொண்டது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஏற்படுத்திய ரணம் இன்றுவரை ஆறாமல் இருக்கிறது. அதற்கான நீதியும் இன்றுவரை கிடைத்தபாடில்லை.…