Author: Menaka Mookandi

  • ஒன்றாரியோ தேர்தல் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு

    ஒன்றாரியோ தேர்தல் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு

    ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 140 ஆண்டுகளில் முதல் முறையாக, பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே, கடுமையான பனிநிலையால் வாக்களிப்பு விகிதம் குறையுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒட்டாவா, டொரொண்டோ உள்ளிட்ட நகரங்களில் பனிப் பிரச்சனை தொடர்பாக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து பணிபுரிந்துவருகிறோம் என ஒன்றாரியோ தேர்தல் நிறுவனத்தின் ஊடக…

  • மேலும் 65 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

    மேலும் 65 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 65 பேர் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்படும் சட்டவிரோத குடியேறிகளை தற்காலிக முகாம்களில் தங்க வைக்க மத்திய அமெரிக்க நாடான…

  • மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை

    மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை

    உலகின் முதனிலை மின்சார உபகரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுகாதார நிறுவனம் மற்றும் எல்.ஜீ நிறுவனம் என்பன குறித்த சில வகை மாடல் அடுப்புகளை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளன. அழி முன்புறத்தில் உள்ள பொத்தான்களை தவறுதலாக செயல்படுத்துவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பயனர்கள் அல்லது செல்லப்பிராணிகள் தவறுதலாக தொடுவதால் நிகழக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்.ஜீ நிறுவனம்…

  • இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதம்

    இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதம்

    அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 291 ரூபா 40 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் விற்பனை விலை 299 ரூபா 98 சதமாக பதிவாகியுள்ளது. இதேவேளை, ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 381 ரூபா 38 சதமாகவும் கொள்வனவு விலை 367 ரூபா 46…

  • நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அமைதியான முறையில் இடம்பெற்ற  சிவராத்திரி பூஜைகள்

    நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அமைதியான முறையில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜைகள்

    நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றன. அந்தவகையில் மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றன. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை ஆலயத்தில் மாலை ஆறு மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை ஆறு மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர். இதேவேளை காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிஸார்…

  • வீட்டு வாடகை தொடர்பாக தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    வீட்டு வாடகை தொடர்பாக தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸில் உள்ள கம்பிலிகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, உயிரிழந்தவர் கணவனையும் அவரது மனைவியையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. எனினும், உயிரிழந்த நபரின் கையில் இருந்த கூர்மையான…

  • சூடானில் இராணுவ விமான விபத்து  46 பேர் பலி

    சூடானில் இராணுவ விமான விபத்து 46 பேர் பலி

    சூடானில் இராணுவ விமான விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 10 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது. சூடானின் ஓம்துர்மான் (Omdurman) நகருக்கு கிழக்கே உள்ள வாடி சாயிட்னா (Wadi Sayidna) ஏர் பேஸில் இருந்து ஆன்டோனோவ் ஏர்கிராப்ட் நேற்று (25) டேக் ஆப் செய்யப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது. ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி வெடித்து விபத்துள்ளது. விமானத்தில் பயணித்த இராணுவ வீரர்கள்…

  • கொழும்பில் புதிய கிளையை அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம் திறந்துள்ளது

    கொழும்பில் புதிய கிளையை அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம் திறந்துள்ளது

    இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளது. அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையமானது கொழும்பு, அம்பத்தளைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ஷெல் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஏஜி (ஷெல்) மற்றும் ஆர்எம் போர்க்ஸ் (தனியார்) லிமிடெட் மேலும் இவற்றின் துணை நிறுவனங்கள் 2024 மார்ச் மாதத்தில் தயாரிப்பு விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1880 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வந்த ஷெல் எரிபொருள்…

  • 50க்கும் மேற்பட்டோர் கொங்கோவில் மர்ம காச்சலால் உயிரிழப்பு

    50க்கும் மேற்பட்டோர் கொங்கோவில் மர்ம காச்சலால் உயிரிழப்பு

    கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மர்ம நோயால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வடமேற்கில் உள்ள போலோகோ நகரில் முதல் வெடிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆப்பிரிக்கா அலுவலகம் கூறியது. ரத்தக்கசிவு காய்ச்சல் அறிகுறிகளைத் தொடர்ந்து மூன்று குழந்தைகள் வௌவால் சாப்பிட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெடிப்பு ஜனவரி 21 அன்று தொடங்கியது, மேலும் 53 இறப்புகள் உட்பட 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிப்ரவரி 9 ஆம் தேதி போமேட்…

  • போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகும் தாதியர்கள்

    போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகும் தாதியர்கள்

    வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி தாதியர்கள் போராட்டத்தை  முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். நாளை வியாழக்கிழமை (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அரசாங்க தாதியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. வரவு – செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு கடுமையான அநீதி இழைத்துள்ளதால் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கூறும் தாதியர் சங்கங்கள், தமது பிரச்சினைக்கு அரசாங்கம்…