Author: Menaka Mookandi

  • யாழில் கனடா அனுப்புவதாக கூறி பண மோசடி !

    யாழில் கனடா அனுப்புவதாக கூறி பண மோசடி !

    யாழில் தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு கனடா அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் தென்னிந்திய இசையமைப்பாளரின் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்து செல்ல உள்ளதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். அவ்வாறு அழைத்து செல்லப்படவுள்ள ஊடகவியலாளர்களுடன் ஊடகவியலாளராக உங்களையும் அழைத்து சென்று கனடாவில் இறக்கி விடுவதாக யாழ்ப்பாண இளைஞன் ஒருவரிடம் கூறியுள்ளார். அதற்காக சிலருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதோடு ஊடக…

  • முன்னாள் போராளிகள் தொடர்பில் புதிய திட்டம் போடும் கருணா !

    முன்னாள் போராளிகள் தொடர்பில் புதிய திட்டம் போடும் கருணா !

    மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். பிரத்தியேகமாக வெளியிட்டிருந்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாணத்திற்கான பொறுப்பாளராக என்னை விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது நியமித்துள்ளார். ஆகையால் கட்சியினால் பாரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். மண்ணிற்காக உழைத்த அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒரு குடையின்…

  • தேங்காயின் விலையில் பாரிய மாற்றம் !

    தேங்காயின் விலையில் பாரிய மாற்றம் !

    எதிர்வரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 அல்லது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காய் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்கின்ற தேங்காயில் ஒரு பங்கு மாத்திரமே தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும் இனி வரும் மாதங்களில் முற்றாக தேங்காய் இல்லாத நிலை காணப்படும் எனவும் தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கிளிநொச்சி…

  • யாழில் 5 வயது சிறுவன்  உயிரிழப்பு !

    யாழில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு !

    யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அராலி மத்தியைச் சேர்ந்த கிருபாகரன் சுலக்சன் என்ற  5 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். உயிரிழந்த  சிறுவன் கடந்த ஒரு வார காலமாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் அதிகாலை சிறுவன் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டமையினால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை திடீர்  மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார்…

  • ஈஸ்டர் படுகொலை நூல் !

    ஈஸ்டர் படுகொலை நூல் !

    கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன – மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா இடம்பெற்றுள்ளது. நூலின் முதல் பிரதிகள் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளிற்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து, சர்வமத தலைவர்களுக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கொலைக்குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் பிள்ளையானின் இந்த செயற்பாடு பலரது விமர்சனத்திற்குள்ளாகியது.

  • தற்காலிக குடியிருப்பு அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

    தற்காலிக குடியிருப்பு அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

    புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் தனது வரலாற்றில் முதல்முறையாக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு, அவர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்யலாம் என்பதற்குக் கட்டுப்பாடு என தொடர்ந்து புலம்பெயர்தல் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதித்து வந்த நிலையில் அடுத்ததாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைக்கப்படும் என்றும், செப்டம்பர் மாதம் முதல் வரம்பு நிர்ணயிக்கப்படும் என்றும் கனேடிய குடிவரவு…

  • “ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தேன்” உண்மையை போட்டுடைத்த மைத்திரி !

    “ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தேன்” உண்மையை போட்டுடைத்த மைத்திரி !

    ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தமக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கருத்து வெளியிட்டதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கூறியவை, “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் நேற்று அந்த அறிக்கையை வெளியிட்டேன். உத்தரவு கிடைத்தால், இரகசிய சாட்சியத்தை வழங்க எதிர்பார்த்துள்ளேன்.அது வேறு…

  • வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பில் முறைப்பாடு!

    வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பில் முறைப்பாடு!

    வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் இன்று கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி மற்றும் சிறிலங்கா காவல்துறையினரது தமிழர்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகளுக்கு துணைபோவதாக அமைந்துள்ள காரணத்தினாலேயே கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியுடன் நேரில் சந்தித்து சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்…

  • ராஜீவ் காந்தி கொலை விவகாரம்! 7 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர் !

    ராஜீவ் காந்தி கொலை விவகாரம்! 7 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர் !

    இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 7 பேரில் மூவரான முருகன்,ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(26) தமிழக அரசு சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன்,…