Author: Menaka Mookandi

  • கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றில் விதிக்கப்பட்ட உத்தரவு !

    கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றில் விதிக்கப்பட்ட உத்தரவு !

    கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதி கூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு எதிராக ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் பி.ஆர.ஐ ஜெமில் முன்னிலையில்…

  • யாழில் இன்று முதல் புதிய நடைமுறை !

    யாழில் இன்று முதல் புதிய நடைமுறை !

    யாழ். மாவட்டத்தில்  போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இது இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக யாழ். மாவட்ட மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார் அத்துடன், நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார்  களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  • யாழில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பறிமுதல்!

    யாழில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பறிமுதல்!

    யாழ். சாவகச்சேரிப்(Chavakachcheri) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டள்ளன. உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற குறித்த வாகனங்களின் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ-கோவிலாக்கண்டிப் பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் ஒன்றையும் – அதன் சாரதியையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

  • இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமாரிடம் விசாரணை !

    இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமாரிடம் விசாரணை !

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.  

  • மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

    மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

    வாடிக்கையாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் இன்று  முதல் சலுகைப் பையை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும்  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, 4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பையை 3,420 ரூபா சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை 36 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு, 9…

  • பாடசாலையில் இலவச மதிய உணவுதிட்டம் !

    பாடசாலையில் இலவச மதிய உணவுதிட்டம் !

    பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளுக்காக மதிய உணவு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நேற்றிலிருந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் தொடக்கம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவோம், பள்ளிக்கு வரும் ஒரு பிள்ளை, எனக்கு பசிக்கிறது என்று கூறுமானால், பள்ளி என்னும் சமுதாயம் மற்றும் நாடு என்னும் முறையில், நாம் எல்லோரும் செய்யவேண்டிய வேலை இன்னமும் நிறைய இருக்கிறது என்று பொருள் என்று…

  • ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி !

    ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி !

    முல்லைத்தீவு – ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவனொருவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம் தமிழ் வித்யாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கு நேற்று முன்தினம் ஆசிரியர் ஒருவர் தடியால் தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தாக்கப்பட்ட மாணவன் அக்கராயன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

  • முருகன், பயஸ், ஜெயக்குமார் நாளை இலங்கை வருகின்றனர் !

    முருகன், பயஸ், ஜெயக்குமார் நாளை இலங்கை வருகின்றனர் !

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு  விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இவர்கள் மூவரும் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்கள் என முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில்  சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் நளினி உள்ளிட்ட ஆறுபேரும் உயர் நீதிமன்றத்தால் 2022 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.  

  • இளம் குடும்பஸ்தர் மீது பொலிஸார் தாக்குதல் !

    இளம் குடும்பஸ்தர் மீது பொலிஸார் தாக்குதல் !

    மன்னாரில் (Mannar) பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளம் குடும்பஸ்தர் மீது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடுமையாக தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (02.03.2024) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.மன்னார், பள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.  

  • ஞானசார தேரரின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    ஞானசார தேரரின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த தீர்ப்பானது இன்று (2.4.2024) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகேயால் வழங்கப்பட்டுள்ளது.இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரதிவாதி ஞானசார தேரர் தற்போது விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில்…