Author: Menaka Mookandi
-

இலங்கைக்கு நேரே 10 நாட்களுக்கு உச்சம் கொடுக்கப்போகும் சூரியன்!
ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 15 வரை இலங்கைக்கு மேலே சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை நாளைய தினம் (05) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனம்…
-

ஈழத்தமிழர்களை இழிவாக பேசிய தமிழ் பெண்ணுக்கு நடுவீதியில் சம்பவம்!
ஈழத்தமிழர்களையும் அவர்களுடைய விடுதலை போராட்டத்தையும் இழிவாக பேசிய பெண் ஒருவர் நடுவீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புலம்பெயர்நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,பிரான்ஸில் வசிக்கும் சுஜி என்ற இலங்கை தமிழ் பெண் தனது டிக் டொக் பக்கத்தில் ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவர்களது விடுதலைப் போராட்டம் பற்றியும் இழிவாக அநாகரிகமான வார்த்தைகளால் பேசி காணொளி பதிவிட்டுள்ளார்.இந்தநிலையில், இவரது காணொளியால் கோபமடைந்த அங்கு வசிக்கும் ஈழத்தமிழ் மக்கள் குறித்த பெண்ணை வீதியில் வைத்து…
-

யாழில் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவிலிருந்து மண்டைதீவு நோக்கி சட்ட விரோதமாக மாடுகள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றி வளைப்பின் போது மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடத்திச் செல்லப்பட்ட எட்டு மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டுள்ளன. எனினும், சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்த்தர் யாழ் தலைமை…
-

ஜனாதிபதி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல் !
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
-

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி !
வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் நேற்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியர் தாக்கியதாக தெரிவித்துள்ளான். இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு…
-

கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய மனைவி!
மதுபோதையில் வந்து மனைவியை நாளாந்தம் அடிக்கும் கணவனை அயலவர்களின் உதவியுடன் மின்கம்பத்தில் கட்டி வைத்து மனைவி உட்பட்ட சிலர் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.உயிரிழந்தவர் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் கணவர், நேற்று இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். மதுபழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால்…
-

கொழும்பு பிரதான மார்க்கத்தில் தடம்புரண்ட தொடருந்து!
மருதானை மற்றும் தெமட்டகொடை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை இலங்கை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதனால் பிரதான தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மஹோ நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
-

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் கடந்த சில காலமாக நிலவி வரும் நிதி நெருக்கடி காரணமாக அதனை விற்பனை செய்வதற்கான விலைமனுக்களை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
-

குறைக்கப்படவுள்ள விசிட்டர் வீசா!
கனடா செல்லும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.தற்காலிக விசாவில் நாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு கனடாவின் மக்கள் தொகையில் 2 சதவீதமானவர்களே தற்காலிக குடியேறியவர்களாகும்.கனேடிய மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் தற்காலிகமாக குடியேறியவர்களாகும்.இது நாம் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டிய ஒன்றென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வருடத்தில் விசிட்டர் விசாவில் இலங்கையர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை…
-

விசாரணை முடிந்து தாயகத்திற்க்குள் கால் வைத்த மூவர்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை இடம்பெற்றது பின்னர் இரண்டு மணித்தியாலங்களின் பின்பு விசாரணை முடிவுற்றதும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.