Author: Menaka Mookandi

  • தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கும் இராணுவம்!

    தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கும் இராணுவம்!

    இராணுவமும், தொல்லியல் திணைக்களமும் தமிழர்கள் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தினை அவர் இன்று (06.04.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் 200 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. அரசிடமிருந்து எத்தகைய உதவிகளையும் எதிர்பாராது தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பிட சுய…

  • சட்ட விரோதமாக மருந்து பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

    சட்ட விரோதமாக மருந்து பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

    கல்முனையில் கடற்படை மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்காக மருந்துகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.63 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து 5,033 மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மருதமுனையை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை உணவு மற்றும் மருந்துப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக…

  • டக்ளஸ் தேவானந்தாவை துரத்திய மக்கள்!

    டக்ளஸ் தேவானந்தாவை துரத்திய மக்கள்!

    கிளிநொச்சி – பூநகரி  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்போது டக்ளஸிற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகியுள்ளதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பொன்னாவெளி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீமெந்து தொழிற்சாலைக்கான வேலைத்திட்டங்களை இன்று (05) ஆரம்பித்து வைப்பதற்காக அவர் சென்றிருந்த போதே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு!

    வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு!

    சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி இந்த செயல்முறை நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். ஆனால் சுற்றுலாத்துறையில் 6 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்களை பயன்படுத்துவதில்லை. இப்போது எங்களின் வாகனங்கள் பழையதாகிவிட்டன.அதனால் தான் சுற்றுலாத் துறைக்காக 250 பேருந்துகள் மற்றும் 750 வான்களை கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.…

  • மீண்டும் ரணிலுடன் கைகோர்க்கும் சஜித்!

    மீண்டும் ரணிலுடன் கைகோர்க்கும் சஜித்!

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டவை ஏற்கெனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும்் .தே.கவுடன் இணையலாமென, ஐ.தே.கவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவால்…

  • 290 ரூபாவை நெருங்கும் அமெரிக்க டொலர்!

    290 ரூபாவை நெருங்கும் அமெரிக்க டொலர்!

    நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(05.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  304.28 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.59 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

  • புத்தாண்டில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம்!

    புத்தாண்டில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம்!

    தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

  • வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்!

    வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்!

    இலங்கையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் டுபாயில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்த இருவர் டுபாயில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிரிவெல்கெலேயைச் சேர்ந்த 28 வயதான சந்துன் மதுசங்க மற்றும் அண்டன்வில்வத்தையைச் சேர்ந்த ரமேஷ் உதார திலின என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.

  • கல்வி அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

    கல்வி அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

    கல்வி அமைச்சின் (Education Ministry) உத்தியோகப்பூர்வ இணையத்தளம் அடையாளம் தெரியாத நபரொருவரால் ஊடுருவப்பட்டுள்ளதாக(Hack).தகவல் வெளியாகியுள்ளது. “Anonymous EEE”எனும் பெயர் கொண்ட நபர் இந்த ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி இந்த ஊடுருவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த நபர் இணையத்தளத்தில் செய்தியொன்றை பதிவிட்டுள்ளார்

  • முல்லைத்தீவில் இளைஞர் கைது!

    முல்லைத்தீவில் இளைஞர் கைது!

    முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அறுக்கப்பட்ட பெறுமதியான பலகையுடன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலனி பகுதியில் சட்டவிரோதமாக மரம் அறுக்கப்பட்டு பலகையாக்கப்படுவதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது. இதற்கமைய குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர்  முதிரை,பாலை மரங்கள் அறுக்கப்பட்ட நிலையில் தனியார் காணி ஒன்றில் காணப்பட்டுள்ள போது அதனை மீட்டுள்ளனர்.