Author: Menaka Mookandi
-
வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது!
வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் ஒன்று மாணவனை தாக்கிய ஆசிரியை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.01.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த 03ஆம் திகதியன்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.…
-
துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!
இரத்தினபுரி – மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். உயிரிழந்த இருவரும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்
-
மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த நாட்களில் மதுபானசாலைகளை மூட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
-
இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா?
எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளான 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு அரச அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. எனினும் இந்த…
-
அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்!
எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போலி நாணயம் மற்றும் வழிப்பறி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.சிங்கள மற்றும்தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் பல்வேறு பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்வதாக தெரிவித்த பொலிஸார், பல்வேறு கடத்தல்காரர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் எச்சரித்துள்ளனர். இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்கள் சுற்றுலா செல்ல வேண்டிய விதம் குறித்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
-
நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்!
குழந்தை பிறக்கும் போது பிரசவ அறைக்கு தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம் மருத்துவமனையில் செயல்படுத்தப்படவுள்ளதாக காசல் மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மகப்பேறு அறையில் ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.அத்துடன், பிரசவத்தின் போது கணவனுடன் தங்கிச் செல்லும் திட்டத்தின் மூலம் தாயால் குழந்தையை நல்ல மனநிலையில் பிரசவிக்க முடியும் என தெரியவந்துள்ளது.
-
கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற விரும்புவோருக்கான முக்கிய அறிவிப்பு!
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பானது 2024 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கட்டண உயர்வானது கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின் படி அறிமுகப்படுத்தப்படுவதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
பாடசாலையில் உயிரிழந்த மாணவன் விவகாரம் அதிபருக்கு கிடைத்த தண்டணை!
மஸ்கெலியா பாடசாலையொன்றில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு நேற்றையதினம் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட போது நீதவான் நால்வரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, ஹட்டன் வலய கல்வி பணிமனை அதிகாரிகள் நேற்றையதினம்(05) குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்தனர். இதன்போது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஆகியோரும் ஒன்றுகூடினர். அதேவேளை மாணவன் இறப்புக்கு…
-
புத்தாண்டுகால விடுமுறை : அரசு ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறையுடன் தொடர்புடைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
-
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட அமைச்சர்!
பொன்னாவெளி சுண்ணக்கல் போராட்டம் 270ஆவது நாளாக தொடர்கின்ற நிலையில் போராட்ட குழுவுடனும் மக்களுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடாமல் சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதியை கொடுத்ததோடு வன்முறையையும் கையாண்டமை கண்டிக்கத்தக்கது என அனைத்து மக்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அமைச்சரால் நேற்று (05) பொது மக்களுக்கு நிகழ்ந்த வன்முறை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், “சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை நாம் நிகழ்த்தும் போது அமைச்சர் டக்ளஸ் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலிருந்து…