Author: Menaka Mookandi
-
தமிழர்கள் தேர்தலை முற்றாக புறக்கணிக்க வேண்டும் : கஜேந்திரன் வலியுறுத்து!
ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Kajenthiran) தெரிவித்துள்ளார். ஐனாதிபதி தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் பகிஷ்கரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொது வேட்பாளரை நிறுத்துவது மற்றும் பகிஸ்கரிப்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 75 வருடங்களாக…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதைமாத்திரைகளை உட்கொண்டு அவற்றை கடத்த முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரை இலங்கை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 38 வயதான மடகாஸ்கர் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் சுமார் 75 கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் பக்கெற்றுக்களை விழுங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 35 மில்லியன் ஆகும். கொக்கைன் எனப்படும் போதைப்பொருளை மாத்திரைகள் வடிவில் சிறு பொதிகளாக சுற்றி விழுங்கியுள்ளார். இதனையடுத்து…
-
கிளிநொச்சியில் வீட்டு உரிமையாளரை தாக்கிய மர்மநபர்கள்!
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடொன்றுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் வீட்டு உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (12-04-2024) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர்கள் மது போதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில்!
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணிலைக்(Ranil Wickremesinghe) களமிறக்குவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில்(Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைகளை மாற்றியதில்லை. ஆட்சியை இழந்தாலும் தனது கொள்கைகளை கடைப்பிடித்தார். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வரவும் உழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இம்முறை கட்சி சார்பற்ற…
-
வவுனியாவில் அரச பேருந்து சாரதி மீது தாக்குதல் முயற்சி!
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அரச பேருந்தினை வழிமறித்து தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பழைய பேரூந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தரித்து நின்ற சமயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினருக்கிடையே வாய்த்தர்க்கமும் இடம்பெற்றுள்ளது. நேரசூசி பிரச்சனை காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
யாழில் இடம்பெற்ற கோர விபத்து – அரச அதிகாரி பரிதாப உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் அரச அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவமானது நேற்று (11.4.2024) யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். பாடசாலை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை, கோப்பாய் – கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் வேக…
-
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டத்தில் குழப்பம்!
வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் குழப்பம் காரணமாக இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மட்ட தெரிவுகளுக்கான பொதுக்கூட்டம் இன்று (12.04.2024) காலை ஒலுமடு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவசேனை முன்னிலையில் நிர்வாகத் தெரிவு…
-
மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகைதர சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
-
மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
யாழ். மாவட்டத்தின் (Jaffna District) பல்வேறு பகுதிகளிலும் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதிக மரக்கறி வகைகள் சந்தைக்கு வந்து சேர்வதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், மீண்டும் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்து வருகின்றது.
-
பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிய சோதனை நடவடிக்கை!
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடுவதை கண்டறிவதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.