Author: Menaka Mookandi
-
உண்மையை மூடிய பொய்களின் சோடிப்பு!
போதைவஸ்து பாவனை காரணமாக கைது செய்யப்பட்டிருக்கும்இளைஞனுக்கும் முன்னாள் அமைச்சர் அவர்களுக்கும் என்ன தொடர்பு?,.. குகப்பிரியன், நிரோஜ் ஆகிய இருவரும் சகோதரர்கள்,..தாய் தந்தையரை இழந்தவர்கள்,..வேலை தேடிக்கொண்டிருந்தஇருவரும் முன்னாள் அமைச்சர் டக்ளஸை சந்தித்திருந்தனர்,.. அனாதரவற்றவர்கள் என்றகாரணத்தால்முன்னுரிமை அடிப்படையில்இருவரையும்தனது அலுவலகப்பணியாளர்களாகடக்ளஸ் நியமித்துக்கொண்டார்.அவர்கள் கட்சி உறுப்பினர்கள்அல்ல என்பது தெரிய வருகிறது. இதில் நிரோஜ் என்பவரேபோதைவஸ்து பாவனை காரணமாக கைது செய்யப்பட்டிருப்பவர்.கொழும்பில் இருந்துசகோதரன் குகப்பிரியன்பொதுப்போக்குவரத்து பஸ் மூலம் மருந்து பொருள் எனபொய் கூறி போதை வஸ்தைஅனுப்பி வைத்ததாகபொலிஸ் விசாரணையில்அவர் தெரிவித்துள்ளதாகஅறியப்படுகிறது. டக்ளஸின் வாகனத்தைஇதில் சம்பந்தப்படுத்தியதும்தம்பியார்…
-
100வது ரொக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று தனது 100வது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி-எப்15 (GSLV-F15) ரொக்கெட்டின் மூலம் என்.வி.எஸ்-02 (NVS-02) என்ற உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் புவியிலிருந்து விண்ணில் அனுப்பப்பட்டது. இந்த செயற்கைக்கோள் இன்று 29 ம் திகதி காலை 6.23 மணிக்கு ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கவும், பேரிடர்களை துல்லியமாக கணிக்கவும்…
-
தண்டேல் பட ட்ரெய்லர் வெளியானது
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கீதா ஆர்ஸ்ட் சார்பாக பன்னிவாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் தண்டேல். இப் படத்தில் நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீகாகுளத்திலுள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
-
சிறைச்சாலையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்!
கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பொதுமக்களை இலக்காகக் கொண்டு எம்-23 எனும் கிளர்ச்சிக் குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் கோமா நகரில் குறித்த கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 13 பேர் பலியாகினர். எனவே, இவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அந் நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் முன்செஸ்க் நகரிலுள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்போது அங்கிருந்த சிறை பாதுகாவலர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல் நடைபெற்றது.…
-
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
நாட்டின் 77வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பு போக்குவரத்து பிரிவு விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், ஒத்திகைகள் நடைபெறும் நாட்களில் விசேட போக்குவரத்து திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும், பல வீதிகள் மூடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒத்திகைகள் நடைபெறும் திகதிகள் மற்றும் நேரங்கள் பின்வருமாறு: 2025.01.29, காலை 06.00 மணி முதல் 12.00 மணி வரை 2025.01.30, காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை 2025.01.31, காலை 06.00 மணி முதல்…
-
இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்று 28 ம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய மட்டத்திலேயே பராமரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (OPR) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது..
-
திருத்தப்பட்ட மின் கட்டணம் குறித்து வெளியான தகவல்!
திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணச் சலுகையை பொதுமக்கள் முறையாகப் பெறுகிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக, வரும் 31 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை வர்த்தக சபை, வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளின் கூட்டமைப்பு, இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேசிய தொழில்துறை சபை, கட்டுமான தொழில் சபை மற்றும் கூட்டு ஆடை சங்கங்கள் மன்றம் ஆகியவை கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.…
-
தீ பிடித்து எரிந்த தென்கொரிய விமானம்!
நேற்று மாலை தென் கொரியாவின் பூசன் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஏர்பஸ் விமானம் தீப்பிடித்ததால், அதில் இருந்த 176 பேரும் வெளியேற்றப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஹாங்காங் நோக்கி செல்வதற்கு தயாரான விமானத்தின் வால் பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். விமானத்தில் 169 பயணிகள், 7 விமான ஊழியர்கள் இருந்தனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 3 பேர் மட்டும்…
-
“அரிசி விற்பனைக்கு அபராதம் – 170 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை!”
கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களிலும் இன்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் 6.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை…
-
நாளை முதல் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு ஆரம்பம்!
வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி இன்று 30 ம் திகதி முதல் ஆரம்பமாகும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 13,376 ஏக்கர் சாகுபடி நிலங்களுக்கு இந்த இழப்பீடு முதல் கட்டமாக வழங்கப்படும் எனவும் 6,234 விவசாயிகளுக்கு 166.7 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.