Author: Menaka Mookandi
-
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எம்.பி கைது!
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ்…
-
ட்ரக் வண்டி சாரதி மீது துப்பாக்கிச் சூடு!
டிரக் வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கெனடி மற்றும் ப்ரோக்ரஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சாரதி குறித்த டிரக் வண்டியின் சாரதி படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதன் பின்னரும் குறித்த ட்ரக் வண்டியின் சாரதி சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரையில் ட்ரக்கை செலுத்தி சென்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வாகனம் ஒன்றில் இருந்த நபர் குறித்த சாரதி மீது துப்பாக்கிச்…
-
டொரன்டோவில் விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!
டொரன்டோவில் வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பஸ் சேவை இடைநிறுத்தம் தொடர்பில் டொரன்டோ போக்குவரத்து சேவை சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை சில பகுதிகளுக்கான போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பினை முதன்மையாக கருத்தில் கொண்டு இவ்வாறு சேவையை இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை சீர்கேடு காரணமாகவே இவ்வாறு சேவைகள்…
-
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு ஆயத்தமாகும் கனடா அரசாங்கம்
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை கனடிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். பெரும்பாலும் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த வரி விதிப்பு காரணமாக பாதிக்கப்படக்கூடிய தரப்புக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் முனைப்புகளில் மத்திய அரசாங்கம்…
-
ஐந்து நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்த அரசாங்கம்!
ஐந்து நாடுகளுக்கு கனேடிய பிரஜைகள் செல்ல வேண்டாம் என கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் மெக்சிகோவிற்கும் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வன்முறை, குற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலேயே இந்த பயண எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கியூபாவில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு மற்றும் அடிப்படை தேவைகளின் குறைபாடுகள் காரணமாக கனடா அரசு பயணிகளுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி…
-
சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் பனிச்சரிவு அபாயம்!
சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் அதிக பனிச்சரிவு அபாயம் பனிச்சறுக்கு வீரர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்** ஸ்கை சீசன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்து முழுவதும் பல பகுதிகளில் பனிச்சரிவு அபாயம் குறித்து பனி மற்றும் பனிச்சரிவு ஆராய்ச்சி நிறுவனம் (SNL) தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த பகுதிகளுக்குள் நுழையத் திட்டமிடும் பனிச்சறுக்கு வீரர்கள், பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் வெளிப்புற ஆர்வலர்களுக்கு இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியமானது. ஆபத்து அளவில் மிக உயர்ந்த நிலைஎச்சரிக்கை, குறிப்பிட்ட பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
ஜெனீவாவில் ஏற்படக்போகும் சிக்கல்!
டிரம்பின் நடவடிக்கைகள் ளால் ஜெனீவாவில் ஏற்படக்போகும் சிக்கல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே **உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO)** அமெரிக்காவை விலக்கிக் கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த முடிவு, குறிப்பாக WHO மற்றும் பல **ஐக்கிய நாடுகள் சபை (UN) நிறுவனங்களை** நடத்தும் **ஜெனீவா** நகரத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஜெனீவா சர்வதேச அமைப்புகளுக்கான மையமாக உள்ளது, மேலும் இந்த குழுக்களுடனான அமெரிக்க உறவில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அது பிராந்தியத்தை பாதிக்கலாம்.…
-
யாழில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது
40,000 போதை மாத்திரைகளை கைவசம் வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
-
கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் நேற்று 28 ம் திகதி இரவு ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். நேற்று 28 ம் திகதி அதிகாலை இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி இயங்கியதால் இருவர் காயமடைந்தனர் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் 13…
-
நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.