Author: Menaka Mookandi

  • விஷால் கூட திருமணம் அவரை நான் காதலிக்கிறேன்… ஓபனாக பேசிய

    விஷால் கூட திருமணம் அவரை நான் காதலிக்கிறேன்… ஓபனாக பேசிய

    தமிழ் சினிமாவில் நாடோடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா.காது கேட்காமல் வாய் பேச முடியாமல் இருந்தும் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்தி இருப்பார். தமிழை தாண்டி பிற மொழி படங்களிலும் நடித்து மக்கள் கவனத்தை பெற்றுள்ளார்.சமீபத்தில் இவருக்கு பிரபல நடிகருடன் காதல், விரைவில் திருமணம் என்ற வதந்தி பரவியது. இதுகுறித்து ஒரு பேட்டியில் அபிநயா கூறுகையில், நான் இப்போ ரிலேஷன்சிப்ல தான் இருக்கேன்.என்னோட சின்ன வயசு நண்பன் தான் பாய் பிரண்ட்,…

  • சீமானை இரகசியமாகக் கண்காணித்த பொட்டம்மான்!

    சீமானின் வன்னிப் பயணம் என்பது நீண்ட நாட்களாகவே வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகிவந்த ஒன்றாக இருந்துவந்த அதேவேளை, வன்னியில் சீமானின் செற்பாடுகள் என்பதும் பல மர்மங்கள் நிறைந்தவையாகவே இருந்துவந்தன. எதற்காகச் சீமான் வன்னிக்கு அழைக்கப்பட்டார் என்கின்ற கேள்விக்கு, எல்லாளன் திரைப்படத்தை இயக்குவதற்காக என்று முன்னர் கூறப்பட்டது.ஆனால் பல மாதங்கள் நடைபெற்ற எல்லாளன் திரைப்பட உருவாக்கத்தில் அந்தத் திரைப்படத்தை ஆரம்பித்துவைத்த ஒரு நாளைத் தவிர, சீமான் அந்த திரைப்படப் பணிகளில் பெரிதாக ஈடுபடவில்லை என்று அறியமுடிகின்றது. அப்படியானால் எதற்காக அவர் விடுதலைப்…

  • இலங்கைக்கு படையெடுக்கும் இந்தியர்

    இலங்கைக்கு படையெடுக்கும் இந்தியர்

    வருடத்தின் இதுவரையான நாட்களில் நாட்டுக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளுள் பெரும்பாலோனோர் இந்தியர்கள் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான நாட்களில் நாட்டுக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை  இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 212,838 ஆகும். இவர்களுள், அதிகளவானவர்கள் இந்தியர்கள் என்பதோடு, அவர்களின் எண்ணிக்கை 37,383 ஆகும். இதனைத் தவிர…

  • தேயிலை ஏற்றுமதி மூலம் 1.43 பில்லியன் டொலர் வருமானம்

    தேயிலை ஏற்றுமதி மூலம் 1.43 பில்லியன் டொலர் வருமானம்

    2024 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை 1.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை 2024 இல் 245.79 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2023 இல் 241.91 மில்லியன் கிலோவாக இருந்தது. 2024 இல் ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு கிலோ தேயிலைக்கு சராசரியாக 5.84 டொலர் கிடைக்கப்பெற்றுள்ளது. தேயிலை தொழில்துறை இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய தொழில்துறையாகும். இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்யும்…

  • விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

    விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

    கடந்த வருடத்தில் வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்று (30) மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு வாரியத்தின் தலைவர் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயிர் சேதம் அடைந்த விவசாயிகளின் கணக்குகளில் தொடர்புடைய நிதியை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனடிப்பயைில், 13,379 ஏக்கருக்கு இன்று (30) இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது.…

  • மாவைக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள ஜனாதிபதி அநுர : வெளியான தகவல்

    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு (Mavai Senathirajah) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவினால் நேற்றிரவு (29) உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளைய தினம் (31) யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தரவுள்ள ஜனாதிபதி மாவை சேனாதிராஜாவின் வீடடுக்குச் சென்று அவரது உடலுக்கு…

  • பாரிய தொகை இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் ஒதுக்கப்படும்! – ஜனாதிபதி

      எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும், இது அண்மைக் காலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு அரசாங்கம் செலவிடும் மிகப்பெரிய தொகையாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற 2025 பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ‘பொருளாதார நிலைமாற்றம்’ என்ற தொனிப்பொருளில் இலங்கை வர்த்தக சபை இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது. அரசியல் ஸ்திரத்தன்மை,…

  • அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிப்பு

    இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது இலங்கை செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 20 ஆம் திகதி…

  • புதிய விமானப்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்

    இலங்கை விமானப்படையின் 20வது தளபதியாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், விமானப்படை தலைமையகத்தில் (ஜனவரி 29, 2025) சம்பிரதாயபூர்வ மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது. மரியாதை அணிவகுப்புக்குப் பின்பு புதிய விமானப்படைத் தளபதி விமானப்படை தலைமையகத்தில் மத வழிபாடுகளுடன் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். புதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி, தனது தலைமையின் கீழ் இலங்கை விமானப்படையின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துதல், உலகளாவிய…

  • ஜனாதிபதியின் யாழ் வருகை – போராட்டம் நடத்துவதற்கு தடை?

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செல்லவுள்ளார். ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.…