Author: Menaka Mookandi
-
எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதேவேளை, கடந்த மாதம் மண்ணெண்ணெய்யின் விலையில் மாத்திரம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது. இதன்படி, கடந்த மாதம் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 188 ரூபாவிலிருந்து 183 ரூபாவாக குறைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பெப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில்…
-
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
நாஉல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வராகொல்ல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாஉல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று 30 பிற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 54 வயதுடைய கோன்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
காலியில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி
காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பான…
-
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய அதிகாரி பணிநீக்கம்
இரத்மலானை பகுதியில் மதுபோதையில் பொலிஸ் ஜீப் ஒன்றை செலுத்தி, முச்சக்கர வண்டியுடன் மோதிய பின்னர் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியும், அதனுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் ஜீப் வாகனமும் காணப்பட்டன. விபத்திற்குப் பிறகு, ஜீப் வாகனம் நிற்காமல் தொடர்ந்ததாகவும் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை…
-
அமெரிக்க விமான விபத்து: 19 சடலங்கள் மீட்பு
அமெரிக்காவில் பயணிகள் விமானமும் இராணுவ ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய போது, இராணுவப் பயிற்சி ஹெலிகாப்டர் மோதியதில் புதன்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. பயணிகள் விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் பயணித்தனர். இராணுவ ஹெலிகாப்டரில் 3 வீரர்கள் பயணித்தனர். இந்த விபத்தில் பயணிகள் விமானம் போடோமாக் நதிக்குள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து, அவசரகால மீட்புப் படையினர் மற்றும்…
-
விருந்தோம்பலுக்கு உகந்த இடங்களில் சுவிட்சர்லாந்தின் மாகாணம்
விருந்தோம்பலுக்கு உகந்த இடங்களில் சுவிட்சர்லாந்தின் மாகாணம் தெரிவு.!! உலகளவில் மிகவும் விருந்தோம்பலுக்கு உகந்த இடங்களை அங்கீகரிக்கும் Booking.com ஆல் வழங்கப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான பயணி மதிப்பாய்வு விருதுகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள கிராபுண்டன் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. சிறந்த விருந்தோம்பல் மற்றும் சேவைகளின் அடிப்படையில் இடங்களை மதிப்பிட்ட பயணிகளின் 240 மில்லியன் மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை அமைந்துள்ளது. மதிப்பாய்வு செய்யப்பட்ட 220 நாடுகளில் சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் முதல் 5 இடங்களில் ஒன்றாகத் தனித்து நின்றது.…
-
மாவை மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் !
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரணம் இயற்கையானது அல்ல மாறாக அது ஒரு கொலைக்கு ஒப்பான செயல் என வைத்திய நிபுணர்கள் மாவையின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர். மேலும் வரம்பு மீறிய அதிர்ச்சி, அல்லது தாங்க முடியாத ஏக்கங்கள் நிகழும் போது தலைப் பகுதியில் உள்ள முக்கிய நரம்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து எல்லை மீறிய இரத்த ஓட்டத்தின் போது நரம்பு பகுதி தன் நிலையை இழக்கும் போது இவ்வாறான மரணங்கள் நிகழ்கிறது…
-
ஜனாதிபதியின் அநுர யாழ் வருகை – போராட்டம் நடத்துவதற்கு தடை?
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செல்லவுள்ளார். ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு…
-
விஜய் படத்தின் ரிலீஸ் திகதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். மேலும் இப்படம் விஜய்யின் கடைசி படமாகும்.இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வர, கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்தான் இப்படத்திலிருந்து போஸ்டர்களை படக்குழு வெளியிட்டனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை…
-
TRC ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைத் தடுக்க புதிய தானியங்கி அமைப்பு!
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRC ) ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைக் கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு மொபைல் போன்களையும் வாங்க வேண்டாம் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் ஜெனரல் பந்துல ஹேரத் தெரிவிக்கையில்;“எங்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத எந்த மொபைல் போன்களையும் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களை…