Author: Menaka Mookandi

  • சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

    சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

    பெப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தில் புதிய சட்டங்கள் அமுல் பிப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தில் பல புதிய சட்டங்களையும் மாற்றங்களையும் கொண்டுவருகிறது, இது விலங்கு நலன் முதல் ஊதியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை அனைத்தையும் பாதிக்கிறது. முக்கிய மாற்றங்களில் ஒன்று, விலங்கு நலனை மேம்படுத்துவதையும் சட்டவிரோத இனப்பெருக்க நடைமுறைகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட **நாய்க்குட்டிகளை இறக்குமதி செய்வதில்** கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துவதாகும். பிறந்து 15 வாரங்கள் ஆகாத நாய்க்குட்டிகளை வியாபார நோக்கில் சுவிட்சர்லாந்துக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது.…

  • அஜித்துக்கு போன் செய்து விஜய் சொன்ன வார்த்தை..

    அஜித்துக்கு போன் செய்து விஜய் சொன்ன வார்த்தை..

    நடிகர் அஜித் கடந்த சில வாரங்களுக்கு முன் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் தனது குழுவுடன் பங்கேற்று, மூன்றுவது இடத்தை பிடித்து வெற்றிபெற்றார். இவருடைய வெற்றியை அனைவரும் கொண்டாடினார்கள். திரையுலக பிரபலங்களில் இருந்து அரசியல்வாதிகள் வரை பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால், நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை.அதே போல் சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அப்போது கூட, விஜய்யின் இருந்து எந்த ஒரு வாழ்த்தும் வரவில்லை. அஜித்தின் நெருங்கிய…

  • வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள்!

    வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள்!

    தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று (01) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கப்பட்டு பயணிகள் போக்குவரத்து, விசேட நோக்க வாகனங்கள், வணிக மற்றும் சரக்கு போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களின் இறக்குமதி தொடர்பாக…

  • ஜனாதிபதி அநுரவின் கேள்வியால் தடுமாறிய உயர் அதிகாரிகள்

    ஜனாதிபதி அநுரவின் கேள்வியால் தடுமாறிய உயர் அதிகாரிகள்

    வடக்கு மாகாண அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அதிகாரிகளைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (31) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை விடயதானங்கள் தொடர்பில் நிதி வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்த நிலையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு கேள்வியை முன்வைத்திருந்தார். “மத்திய அரசால் வடக்கு மாகாண…

  • எரிபொருளின் விலை திருத்தம் செய்த மற்றுமொரு நிறுவனம்

    எரிபொருளின் விலை திருத்தம் செய்த மற்றுமொரு நிறுவனம்

    2025 ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சினோபெக் சுப்பர் டீசலின் சில்லறை விலையை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாதாந்த எரிபொருள் திருத்தத்திற்கு அமைய, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் (Sinopec) எரிபொருள் விலையும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (31) நள்ளிரவு முதல் சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் சுப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, 313 ரூபாயாக இருந்த சுப்பர் டீசலின்…

  • லோகேஷ் கனகராஜுடன் இணையும் புதிய கூட்டணி!

    லோகேஷ் கனகராஜுடன் இணையும் புதிய கூட்டணி!

    லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அதை முடித்துவிட்டு லோகேஷ் யாருடன் கூட்டணி சேர போகிறார் என பல செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் தனுஷ் உடன் தான் லோகேஷ் அடுத்து கூட்டணி சேர போகிறாராம். அந்த படத்தை 7 ஸ்கிறீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

  • இலங்கை சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களும் இனவாதிகளின் மீள்பிரவேசமும்!

    இலங்கை சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களும் இனவாதிகளின் மீள்பிரவேசமும்!

    அண்மைக்காலமாக அநுர ஆட்சியையே ஆட்டங்காணவைக்கும் முகமாக சுமத்தப்பட்ட ஓர் குற்றச்சாட்டே, சுங்கத்திலிருந்து 323 கென்டெயினர்கள் எந்த பரிசோதனையுமின்றி விடுவிக்கப்பட்டதாக வெளிவரும் செய்தி. இதில், பல தரமற்ற மருந்துப்பொருட்கள், போதைப்பொருட்கள் போன்றன இருக்கலாமென குற்றஞ்சாட்டப்படுகிறது.இதிலுள்ள சரி பிழைகளுக்கப்பால், இவ்விடுவிப்பானது சுங்க அதிகாரிகளின் முடிவேயன்றி இதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை. கொள்கலன்களின் நெரிசலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு ஒழுங்கு முறையே இது. இதில் ஏதும் ஊழல்கள் இடம்பெற்றிருக்கின்றனவா என அரசாங்கம் ஏற்கனவே சுங்க அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதையும் ஒரு…

  • கடும் நெருக்கடியில் கனடா : ட்ரம்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு

    கடும் நெருக்கடியில் கனடா : ட்ரம்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு

    கனடா (Canada) மீது வரி விதிப்பது தொடர்பில் தாம் ஏற்கனவே குறிப்பிட்டதை சனிக்கிழமை நிறைவேற்ற இருப்பதாக அமெரிக்க (United States)  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் நேற்று (30.01.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், மெக்ஸிகோவும் கனடாவும் வர்த்தக விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஒருபோதும் நல்லது செய்ததில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவை அவர்கள் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தியுள்ளனர் என்றும்…

  • விடுதலைப்புலிகள் அமைப்பு குறித்து எழுந்துள்ள பயம்!

    காலி முகத்திடல் அரகலய பூமியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கம் வெளிப்பட்டது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,”முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பின் நோக்கம் இன்றும் தேசிய…

  • வவுனியாவில் போதைப்பொருளுடன் வயோதிப பெண் கைது

    வவுனியாவில் போதைப்பொருளுடன் வயோதிப பெண் கைது

    வவுனியாவில் போதைப்பொருளுடன் வயோதிப பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் செட்டிகுளம் பகுதியில் வைத்து 51 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 1740 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 2380 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில்…