Author: Menaka Mookandi

  • பல இலட்சம் பெறுமதியான சிகரெட் தொகை சிக்கியது

    பல இலட்சம் பெறுமதியான சிகரெட் தொகை சிக்கியது

    வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணி ஒருவரை, இன்று (02) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர் கொண்டு வந்த 38,800 சிகரெட்டுகள் அடங்கிய 179 சிகரெட் அட்டைப்பெட்டிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் 53 லட்சத்து 70 ஆயிரம்…

  • பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

    பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

    நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர் கூறினார். கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ…

  • சுதந்திர தின விழாவின் பாதுகாப்புக்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள்!

    சுதந்திர தின விழாவின் பாதுகாப்புக்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள்!

    77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான பிரதான விழா மற்றும் ஒத்திகைகளின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் ஒத்திகை மற்றும் நிகழ்வை எளிதாக்கும் வகையில் பொலிஸ் சிறப்பு போக்குவரத்து திட்டத்தையும் அறிவித்துள்ளது.சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகைக்கான தயாரிப்பாக, இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு அருகில்…

  • பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான கொடுப்பனவு வெளியான தகவல்!

    பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான கொடுப்பனவு வெளியான தகவல்!

    பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் மானியங்கள் சுமார் 4 மாதங்களாக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ரூ.7,500 மாதாந்திர கொடுப்பனவு தற்போதைய வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு போதுமானதாக இல்லை என்றும்,பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே அதை ரூ.10,000 ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக, மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் முன்னாள்…

  • யாழ் முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண் கலங்கியவர் மாவை!

    யாழ் முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண் கலங்கியவர் மாவை!

    இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என்ற அடிப்படையில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த மூத்த அரசியல்வாதியும் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, யாழ் மாவட்ட…

  • அனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித!

    அனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித!

    பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 7 துப்பாக்கிகளில் 5 ஆரம்ப கட்டத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

  • நெல்லுக்கான உத்தரவாத விலை எங்கே?-சஜித்

    நெல்லுக்கான உத்தரவாத விலை எங்கே?-சஜித்

    நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாதுபோயுள்ளது என, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதியில், கனேவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இலுக்வத்த கிராமத்தில் இன்று (01) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். “கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் உத்தரவாத விலையை வழங்கப்படவில்லை. 3 இலட்சம் மெற்றிக் டொன்…

  • மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற புதிய திட்டம்

    மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற புதிய திட்டம்

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்காவிட்டாலும், அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால், அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். செல்லவில்லை என்றால், இன்னும் சில நாட்களில் அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்பிப்போம். அதன்படி சட்டரீதியாக வௌியேற வேண்டி வரும். இப்போதே…

  • இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை

    இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை

    10 மற்றும் 17வயதான இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபரும் பலத்த காயங்களுடன் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. என்ன காரணத்திற்காக இந்த படுகொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  • கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை

    கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை

    கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை வழக்கு ஒன்று கடந்த ஆண்டு தொலைக்காட்சித் தொடராக வெளியானது. இந்நிலையில், அந்த இளம்பெண்ணைக் கொலை செய்த பெண் ஜாமீனில் வெளியிலிருந்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 1997ஆம் ஆண்டு, இந்திய வம்சாவளியினரான ரீனா விர்க் (Reena Virk) என்னும் இளம்பெண், ஒரு கூட்டம் பதின்மவயதுப் பெண்கள் மற்றும் ஒரு பையனால் கொல்லப்பட்டார். ரீனாவின் தந்தையான Manjit Virk இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர், தாய் Suman Virk, இந்திய கனேடியர்.…