Author: Menaka Mookandi

  • மொட்டின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

    மொட்டின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

    ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது கீழ்நிலை ஆதரவாளர்களை நோக்கிச் செல்லும் வேலைத்திட்டமான “நமல் சமக கமின் கமட்ட” (நாமலுடன் கிராமம் கிராமமாக ) 01 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மஹா போதியாவிற்கு அருகில் சமய அனுஷ்டானங்களுடன் இந்த முயற்சி ஆரம்பமாகவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ பதவியேற்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்த…

  • கனடாவில் அதிக அளவில் களவாடப்படும் தொலைபேசிகள்

    கனடாவில் அதிக அளவில் களவாடப்படும் தொலைபேசிகள்

    கனடாவில் அதிக எண்ணிக்கையிலான தொலைபேசிகள் களவாடப்படுவதாக அல்லது காணாமல் போவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ரொறன்ரோவில் அமைந்துள்ள முன்னணி தொலைபேசிகள் விற்பனை நிலையங்களில் இவ்வாறு தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரையில் ஹால்டன் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பில் ஹால்டன் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காணாமல் போன தொலைபேசிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சி சி டிவி…

  • சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – இன்று வழங்கப்படுகிறது

    சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – இன்று வழங்கப்படுகிறது

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சார்பில் இன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994ம் ஆண்டு இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கவுரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த விருதினைப் பெறும் 31-வது நபர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 51 வயதான டெண்டுல்கர், இந்திய அணிக்காக 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக…

  • மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர்

    மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர்

    மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே நேற்று சனிக்கிழமை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது திமிங்கிலங்களை பார்வையிடல் மையத்தை அவர் பார்வையிட்டதுடன், அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார். இங்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால், அதிக வருமானம் ஈட்டப்பட்டு வருகின்றது. குறிப்பாக, டொலர் வருவாயை அதிகரிக்கும் முக்கியமான அம்சமாக இது விளங்குவதால், சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்ப்பதற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து…

  • நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

    நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

    மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல கருணாரத்ன, ஓய்வுபெறுவதற்கு முந்திய விடுமுறையை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஒருவர் அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்படும்…

  • 4,943 டெங்கு நோயாளர்கள் ஜனவரியில் மாத்திரம்

    4,943 டெங்கு நோயாளர்கள் ஜனவரியில் மாத்திரம்

    ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதன் எண்ணிக்கை 1,382 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கம்பஹா மாவட்டத்தில் 764 டெங்கு நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 315 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

  • தீயில் சங்கமமாகியது மாவையின் பூதவுடல்!

    தீயில் சங்கமமாகியது மாவையின் பூதவுடல்!

    மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது. அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியை ஆரம்பமாகியதோடு, காலை 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டப்புரம் தச்சங்காடு இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், மத குருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு…

  • சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்

    இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தினத்தில் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை ஒவ்வொரு கைதிக்கும் போதுமான அளவில் வழங்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கைதிகளை பார்வையாளர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

  • தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

    தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

    வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக வவுனியா பொலிஸார் இன்று (02) தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய  சத்துரங்க ஹேரத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள்…

  • சுவிஸில், தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவரின் பெற்றோருக்கு தண்டனை

    சுவிஸில், தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவரின் பெற்றோருக்கு தண்டனை

    சுவிஸில், தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவரின் பெற்றோருக்கு தண்டனை சுவிட்சர்லாந்தில் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபரின் பெற்றோருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்வதற்காக சிரியாவிற்கு சென்ற இளைஞர் ஒருவரின் பெற்றோருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ஐ.எஸ் மற்றும் அல் கய்தா தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான தடை விதிப்பு சட்டங்களை மீறியதாக இந்த பெற்றோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரின் தாய்க்கு 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அந்த தண்டனை…