Author: Menaka Mookandi
-
இலங்கை ஜனாதிபதி அநுரவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வௌியிட்ட சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி கீழே… தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு…
-
இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்று
77வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று (04) காலை சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்த செலவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்தார். இந்த ஆண்டு சுதந்திர…
-
அநுர அரசிடம் இருந்து தப்பித்துக் கொள்ள மகிந்த கும்பலின் சூழ்ச்சி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட ஏழு நாள் பிரித் போதனை ஒரு மறைமுக அரசியல் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. பாரிய நிதி மோசடி மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமகால அரசாங்கத்தின் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் ஏழு நாள் பிரித் போதனை ஏற்பாடு செய்யப்பட்டதாக பொதுஜன பெரமுன கட்சியின்…
-
வரிவிதிப்பினால் கடும் கோபம்; டிரம்புக்கு சீனா விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வரியை உயர்த்தி தவறு செய்துவிட்டதாக டிரம்புக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் வரி இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும்…
-
கனடிய பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அமெரிக்க ஜனாதிபதி
கனடிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலை நிலவி வருகின்றது. கனடிய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா 25 வீத வரியை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பிற்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்கா இறக்குமதிகள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. இவ்வாறான ஒரு பின்னணியில் இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது.
-
உத்தியோகபூர்வமாக அறிவித்தால் மஹிந்த ராஜபக்ஷ வௌியேற தயார்!
அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமானால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால், மஹிந்த ராஜபக்ஷ…
-
அம்பலாந்தோட்டை கொலைச் சம்பவம்- கைதான 5 பேர்
அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் (2) பிற்பகல் மூவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக மேற்படி கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சுதந்திர தினத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்
77வது சுதந்திர தினத்தின் விழா நாளை (04) காலை, சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன. நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இன்று (03) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, தெரிவித்தார். அதன்படி, அங்கு வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டு பின்னர் சுதந்திர தின விழாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறிய ஊடகப் பேச்சாளர், சுதந்திர தின விழாவில்…
-
சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது!
புலத்சிங்கஹல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தன்வாடிய பிரதேசத்தில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாக புலத்சிங்கஹல பொலிஸார் தெரிவித்தனர். கைதான நபர் 50 வயதுடைய கந்தன்வாடிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 101 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கஹல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை…