Author: Menaka Mookandi

  • உணவுப் பற்றாக்குறையால் பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம்

    உணவுப் பற்றாக்குறையால் பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம்

    இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உணவுப் பற்றாக்குறை காரணமாகத் திருமணம் ஒன்று பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மணமகனின் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவு போதுமானதாக இல்லை என்று குற்றம் சாட்டி, மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், மணமகன் தரப்பு திருமணத்தைத் தொடர மறுத்துவிட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக, மணமகளின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார்…

  • 28 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

    28 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

    மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை நேற்று (04) காலை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04) காலை விடத்தல் தீவு குளப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 13 பொதிகளை கொண்ட கேரள கஞ்சா தொகையை மீட்டனர். சுமார் 28 கிலோ…

  • சுவீடனில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் உயிரிழப்பு

    சுவீடனில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் உயிரிழப்பு

    சுவீடனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவனம் ஒன்று உள்ளது. கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்று அழைக்கப்படும் இந்தப் கல்வி நிறுவனம், 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது. இந்த கல்வி நிறுவனத்தில் தங்கி படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் பரீட்சை முடிந்ததை அடுத்து தங்களின்…

  • ஒஷாவாவில் இடம் பெற்ற வீதி விபத்தில் 18 வயது இளைஞன் உயிரிழப்பு

    ஒஷாவாவில் இடம் பெற்ற வீதி விபத்தில் 18 வயது இளைஞன் உயிரிழப்பு

    கனடாவின் ஒஷோவா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 18 வயது இளைஞன் கொல்லப்பட்டுள்ளார். ஒரு வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கிரான்ட்விவ் மற்றும் ரெட்பர்ன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் தர்ஹம் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த வாகனம் மின்கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து வேறும் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.…

  • நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட அதிரடி ட்வீட்!

    நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட அதிரடி ட்வீட்!

    இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தனது “X” தளத்தில் பதிவொன்றை இட்டு, இலங்கை மட்டும் அண்மைய ஆண்டுகளில் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID, மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும்,…

  • கனடாவில் கொலையுடன் தொடர்புபட்ட இருவர் கைது

    கனடாவில் கொலையுடன் தொடர்புபட்ட இருவர் கைது

    கனடாவில் படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கனடாவின் டொரன்டோ பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரொறன்ரோவில் இந்த ஆண்டில் பதிவான முதல் படுகொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மெடிசன் மற்றும் ப்ளூர் வீதிகளை அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த…

  • அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தும் பணி ஆரம்பம் !

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தும் பணி ஆரம்பம் !

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணி தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது போன்றவற்றை வலியுறுத்தி டிரம்ப் பிரசாரம் செய்துவந்தார். 205 இந்தியர்கள் நாடு கடத்தல் இந்நிலையில் அதிபராக பொறுப்பேற்றதும், டிரம்ப் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு…

  • கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் டொனால்ட் ட்ரம்ப் !

    கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் டொனால்ட் ட்ரம்ப் !

    கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்த இரு நாடுகளுக்கும் இன்று முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரி ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை அதேவேளை எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க மெக்சிகோவும்…

  • கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்கள் அதிகரிப்பு

    கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்கள் அதிகரிப்பு

    கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது. வாரம் ஒன்றிற்கு சுமார் ஐந்து மரணங்கள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ரெறான்ரோ பொதுசுகாதார அலுவலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 135 வீடற்றவர்கள் உயிரிழந்திருந்தனர். 2023 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியின் மரண…

  • புதிய வரி திருத்திற்கு அமைய 6 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் வாகனங்கள்

    புதிய வரி திருத்திற்கு அமைய 6 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் வாகனங்கள்

    புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பின் தலைவர் என்ரூ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி 3 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உந்துருளி ஒன்று இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதுடன் விதிக்கப்பட்ட வரி காரணமாக 7 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும் என குறிப்பிட்டார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஆறரை இலட்சம் ரூபாவால் அதிகரிக்கக் கூடும்.…