Author: Menaka Mookandi
-
அமெரிக்காவினை புறக்கணிக்க கனேடிய மக்கள் முடிவு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்து அவசர அவசரமாக பல நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது கனடா அரசு. ஆனால், கனேடிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து போதைப்பொருட்களும், சட்டவிரோத புலம்பெயர்வோரும் அமெரிக்காவுக்குள் நுழைவதாகக் கூறி, அதனால் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக மிரட்டினார். பயந்துபோன கனடா அரசு, ஒருபக்கம் அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்க நாங்களும் வரி விதிப்போம் என்று சொல்லிக்கொண்டே, மறுபக்கம், உடனடியாக எல்லை பாதுகாப்புக்காக ஏராளம் பொருட்செலவில்…
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி குறித்து வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தின் பின்னரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அளவில் தேர்தலை நடத்தக்கூடிய வழியுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி…
-
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டம் தொடர்பான சபாநாயகரின் முக்கிய அறிவிப்பு
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான சட்டம் குறித்த சட்ட விதந்துரைகள் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றின் விதந்துரைகள் அல்லது சட்ட விளக்கம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன(Jagath Wickramaratne) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியினர் உள்ளூராட்சி மன்ற சட்டம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் விசேட சட்டம் தொடர்பிலே…
-
இந்தியாவிற்கு திருப்பி அனுப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாதிகள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அமெரிக்க அரசு நேற்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டவிரோத குடியேறிகள் பட்டியல் கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினரை உள்ளடக்கி…
-
ஸ்வீடன் பாடசாலையில் பாரிய துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஸ்வீடனில் பாடசாலையொன்றில் நேற்று (4) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேல்நிலை பாடசாலையில் சம்பவம் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ஒரிபுரொ நகரில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்ற மேல்நிலை பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒன்றாரியோவில் கொள்ளைச் சம்பவத்துடன்டன் தொடர்புடைய ஒருவர் கைது
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் மோரிஸ்டோன் பகுதியில் வீடு உடைப்பு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் தேதி இந்த கொள்ளை சம்பவம் இவ்விடம் பெற்றுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் வெலிங்டன் கவுன்ட்டி பகுதியில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று பேர் வீட்டுக்குள் பலவந்தமாக பிரவேசித்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது வீட்டு…
-
கனடாவில் இடம் பெறும் நிதி மோசடி தொடர்பில் எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் இடம்பெறும் நிதி மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண போலீசார் இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோசடி சம்பவத்தில் நபர் ஒருவர் சுமார் 20,000 டாலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்திற்குமான கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உத்தரவாதம் அளித்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் வங்கியில் இருக்கும் பணத்தை நம்பிக்கை நிதியம் ஒன்றில் வாய்ப்பு செய்வதாக கூறி…
-
ஐ.நாவிலிருந்து விலகிய அமெரிக்கா
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த சில வாரங்களாக பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்துள்ளார். பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்த டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதும், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகியதும் அவற்றில் முக்கியமானவை.…
-
தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த யாழ் இளைஞர்
யாழ்ப்பாணத்தில் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது யாழ்ப்பாணம் – கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் தனது வீட்டில் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சடலம் மீதான…
-
துப்பாக்கிதாரி ஒருவர் கைது
துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. சந்தேக நபர் நேற்று (04) பிற்பகல் மட்டக்குளிய கந்திரானவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவர் வசம் இருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுவெல, மேல் போமிரிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்…