Author: Menaka Mookandi
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் வெளியான அதிர்ச்சித்தகவல்!
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்கள் நேற்று அமெரிக்காவின் ராணுவ விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இந்நிலையில் , அவர்களில் சிலர் அமெரிக்கா செல்வதற்கு 60 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளதாக கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன ஏஜென்சிகளுக்கு 40 லட்சம் முதல் 60 லட்சம் கொடுத்து பயணம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கிய வெளிநாட்டு நபர்களை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்த டிரம்ப் அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, நேற்று முதல் கட்டமாக…
-
வேலை வாய்ப்பு என்று கூறி பாரிய மோசடி
அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையை பயன்படுத்தி மோசடியான விளம்பரம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. வேலை வாய்ப்புகளை…
-
நெல் கொள்வனவை முன் இட்டு அரச களஞ்சியசாலைகள் திறப்பு
நெல் கொள்வனவை முன்னிட்டு இன்று (06) முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அறுவடை இடம்பெறும் கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த குறிப்பிட்டார். நெல் கொள்வனவிற்காக திறைசேரியில் இருந்து 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லுக்கான நிர்ணய விலைகள் நேற்று (05) அறிவிக்கப்பட்டன. அதற்கமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல் 120…
-
மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு – விசாரணை திகதி வெளியான முக்கிய அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு இன்று (06) நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
-
பெண்ணொருவர் கழுத்து அறுத்து தீ வைத்து கொலை
ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கணவர் வீடு திரும்பி மனைவியைச் தேடிய போது, அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தக்…
-
கைது செய்யப்படுவாரா கோட்டபாய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில முன்கூட்டியே ஊகித்திருக்கின்றார் என்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அவர் முன்னரே அறிந்திருக்கின்றார் எனவே தோன்றுகின்றதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று செவ்வாய்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது…
-
இளைஞனை சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரிகள் பணி இடை நிறுத்தம்
வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பணிகளை இடைநிறுத்த பதில் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சுமார் 6 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நிறுத்தப்பட்டுள்ளனர். விசேட புலனாய்வுப் பிரிவு விசாரணை வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, கும்புறுபிட்டிய பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கல்கிஸ்ஸை…
-
சட்டவிரோத கார் இறக்குமதி; கைதான தொழிலதிபர்
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில் பதிவு செய்த குற்றச்சாட்டில் வாகன தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மொரொன்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் என கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரை…
-
இலங்கையின் பிரபல மருத்துவமனையில் ஏற்பட்ட மோசடி
இலங்கையின் பிரபலமான புற்றுநோய் மருத்துவமனையான கொழும்பு – மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கான நன்கொடை கணக்கில் இருந்த 40 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. அதன்படி, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் எந்தவொரு பயனுள்ள நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கிடையில், தேசிய சுகாதார மேம்பாட்டு நிதியத்திற்கு நன்கொடையாக பெறப்பட்ட சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய், நிதியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை…
-
கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் 25% வரி விதித்ததன் ஊடாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் போக்கைக் காட்டுகிறது. இருப்பினும், கடந்த சில நாட்களில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் வரிகளின் தாக்கம் நீண்ட காலத்திற்கு எண்ணெய் தேவையை அச்சுறுத்துவதால் ஒட்டுமொத்த எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன. ஏனைய நாடுகளுடனான ஒப்பந்தம் கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெயை வழங்கும் இரண்டு முக்கிய வழங்குநர்களாகும். கனடா மற்றும் மெக்சிகோவுடன் தற்காலிக ஒப்பந்தம்…