Author: Menaka Mookandi

  • கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

    கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

    மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான ஓல்கோட் மாவத்தை பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  • இலங்கை பாடசாலை மாணவி வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

    இலங்கை பாடசாலை மாணவி வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

    கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்டமா…

  • லண்டனில் நேர்ந்த சோகம்  28 வயதான இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம்

    லண்டனில் நேர்ந்த சோகம் 28 வயதான இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம்

    பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணம் நற்பிட்டிமுனையை பூர்விகமாக கொண்டவரும், UK- Liverpool Bootle நகரில் வசித்த 28 வயதான காயத்ரி ஜெயதீசன், கடந்த ஜனவரி 25 அன்று உள்ள தனது வீட்டில் நண்டு கறி சாப்பிட்ட பின்னர் உணவு ஒவ்வாமை காரணமாக (allergic reaction to seafood) உயிரிழந்துள்ளார். இவர் லண்டனுக்க சென்று…

  • போதை மருந்து கடத்துவோருக்கு  கடுமையான  தண்டனை விதிக்கப்படும்

    போதை மருந்து கடத்துவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்

    போதை மருந்து கடத்துவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் தெரிவித்துள்ளார். 40 மில்லி கிராம் எடைக்கும் அதிகமான பென்டனைல் என்னும் போதை மருந்து வைத்திருப்போருக்கு ஆயுள் தண்டனை விதிக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொலைக் குற்றச் செயலுக்கு வழங்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். 20 முதல் 40 மில்லி கிராம் எடையுடைய போதைப் பொருள் கடத்துவோருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.…

  • கனடாவில் பிரபல இந்திய பாடகரின் வீட்டைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு!

    கனடாவில் பிரபல இந்திய பாடகரின் வீட்டைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு!

    கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பஞ்சாபி பாடகரான பிரேம் தில்லானின் குடியிருப்பைக் குறி வைத்தே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், ஜெய்பால் புல்லர் எனும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலொன்று இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 2022 ஆம் ஆண்டு பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெயரையும் அந்தக் வெளியிட்ட ஒரு…

  • ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

    ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

    ரொறன்ரோவில் மோஸ் பார்க்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குயின் மற்றும் ப்ரோன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவரின் உயிரை காக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது பலன் அளிக்கவில்லை என உயிர் காப்பு பணியாளர்களும் போலீசாரும் தெரிவிக்கின்றனர். படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இலக்கான நபர் பற்றிய விவரங்களோ தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பற்றிய…

  • காசாவை கைப்பற்றும் திட்டத்தை கைவிட்ட  டொனால்ட் டிரம்ப்

    காசாவை கைப்பற்றும் திட்டத்தை கைவிட்ட டொனால்ட் டிரம்ப்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் அழிக்கப்பட்ட பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு முன்வைத்த திட்டத்தை மீளப் பெறும் வகையிலான அறிவிப்பை வெள்ளை மாளிகை விடுத்துள்ளது. பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து ‘தற்காலிகமாக இடம்பெயர்த்த’ மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் விரும்பினார் என வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர்  விமர்சனம் அத்துடன் அந்த பகுதியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா பணம் செலுத்தாது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின்…

  • கனடாவில் ஓடும் வாகனங்கள் மீது கற்களை வீசிய இளைஞர்கள் கைது

    கனடாவில் ஓடும் வாகனங்கள் மீது கற்களை வீசிய இளைஞர்கள் கைது

    கனடாவில் ஓடும் வாகனங்கள் மீது கற்களை வீசிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 18 மற்றும் 17 வயதான இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பயணம் செய்த வாகனங்கள் மீது இவ்வாறு கற்கள் வீசி எறியப்பட்டுள்ளன. குறிப்பாக மார்க்கம் மற்றும் வித்சர்ச் பகுதிகளில் இந்த கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர்கள் இருவருக்கு எதிராகவும் சுமார் 31 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்தேக நபர்கள் இடமிருந்து ஆயுதம் ஒன்றும்…

  • கனடாவில் வீடு உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக எச்சரிக்கை

    கனடாவில் வீடு உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக எச்சரிக்கை

    கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யோர்க் பிராந்திய போலீசார் இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். அண்மையில் ரிச்மண்ட் ஹில் பகுதியில் குடியிருப்புகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையர்கள் பசை போன்ற ஒரு பதார்த்தத்தை பயன்படுத்தி கதவுகளை உடைத்து உள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யோர்க் பிராந்தியத்தில் இவ்வாறான இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு சம்பவங்களின் போதும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை என…

  • அமெரிக்காவுக்குள்  இருந்து கனடாவுக்குள் நுழைய முயன்ற 16 பேர்: ஒருவர் உயிரிழப்பு

    அமெரிக்காவுக்குள் இருந்து கனடாவுக்குள் நுழைய முயன்ற 16 பேர்: ஒருவர் உயிரிழப்பு

    அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து புலம்பெயர்வோர் அமெரிக்காவுக்குள் நுழைவதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில வராங்களில் 16 பேர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை, கனடா அமெரிக்க எல்லையிலுள்ள Coutts என்னும் ஆல்பர்ட்டா மாகாண கிராமம் வழியாக, அமெரிக்காவுக்குள்ளிருந்து கனடாவுக்குள் ஒருவர் வாகனம் ஒன்றில் நுழைவதை கனேடிய பொலிசார் கவனித்துள்ளார்கள் அவர் தனது வாகனத்தில் தப்பியோட முயற்சிக்க, அவரது வாகனத்தின் டயர்களை பஞ்சர் செய்துள்ளார்கள் பொலிசார். உடனே அவர் தனது வாகனத்திலிருந்து இறங்கி…