Author: Menaka Mookandi
-
சுவிஸ் எல்லை சோதனையில் சிக்கிய 3,615 பேர்
ஆயிரக்கணக்கான மக்களை சுவிட்சர்லாந்திற்குள் நுழைய அனுமதிக்க ஜெர்மன் ஃபெடரல் போலீஸ் மறுக்கிறது 2024 செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து பிப்ரவரி 2025 தொடக்கம் வரை, சுவிட்சர்லாந்தின் எல்லையில் 3,615 பேருக்கு நுழைவதற்கு ஜெர்மன் ஃபெடரல் காவல்துறை மறுத்துள்ளதுடன் அவர்களின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட Stuttgart ஃபெடரல் போலீஸ் அறிக்கையிலிருந்து இது வெளிப்படுகிறது. புள்ளிவிவரங்கள் ஷெங்கன் “உள் எல்லைகளில்” தற்காலிகமாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகளின் இருப்புநிலைக் குறிப்பின் ஒரு பகுதியாகும்.…
-
சுவிட்சர்லாந்தில் உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிரம்
சுவிட்சர்லாந்தில் உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிரம் சுவிட்சர்லாந்தில் உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார். இலங்கை தமிழருக்கு சொந்தமான பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையை(Sri lanka) பொறுத்தவரை தற்போது ஏதோவொரு வகையில் பொருளாதார உதவி தேவைப்படும் நாடாகவே உள்ளது.…
-
டொனால்ட் டிரம்பிற்கு தங்க பேஜரை பரிசளித்த இஸ்ரேல் பிரதமர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ‘தங்க பேஜரை’ பரிசாக அளித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்தித்தார். சந்திப்பின்போது ஹமாஸ் உடனான போர், பணய கைதிகள் விடுதலை உள்பட பல்வேறு விவகாரங்கள் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர் இந்த பயணத்தின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிற்கு தங்கத்தால் ஆன பேஜரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிசாக அளித்துள்ளார். அதேவேளை…
-
இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படும் முக்கிய குற்றவாளிகள்
நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று (07) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளனர். டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸார் குறித்த சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிக்கையை வௌியிட்டிருந்தனர். குறித்த மூன்று சந்தேக நபர்களும் இன்று காலை UL-226 ரக விமானத்தில்…
-
ரஷ்யா இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் இன்று (07) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நாட்டிலுள்ள அவர்களில் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத்…
-
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது!
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) பிரதி ஆணையாளர் ஒருவர் நேற்று(5) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட துணை ஆணையாளர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஹம்பாந்தோட்டை அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டு தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்…
-
அரச சின்னங்களை பயன்படுத்தி மோசடி சம்பவங்கள் – கணினி பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!
அரச நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு காணப்படுவதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதன் மூலம் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் மோசடி இடம்பெறுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார். மேலும் பல அரச நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி தொழில் வெற்றிடம் காணப்படுவதாக பல…
-
அர்ச்சுனா எம்.பி க்கு எச்சரிக்கை!
தனது அறிவித்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை படைக்கல சேவிதர்களை கொண்டு சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் என்று பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்வி சாலி கடுமையாக எச்சரித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரிடத்தில் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது சபாபீடத்தை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் வசனமொன்றை வெளியிட்டதாக ஏற்பட்ட சர்ச்சையின்போது அர்ச்சுனா எம்.பி. அமைதியற்ற முறையில் நடந்துகொண்டமையினால் சபாநாயகர் இவ்வாறு…
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை; டொனால்ட் டிரம்ப் கையெழுத்து
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார். அமெரிக்காவின் புதிய உத்தரவு அந்த வரிசையில் தான் தற்போது சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நீதிமன்றம்…