Author: Menaka Mookandi
-
பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்துக்கு தடை
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனத்தின் (PFF) அங்கத்துவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது (FIFA) தடை விதிப்பது இது மூன்றாவது முறையாகும். சர்வதேச கால்பந்து அளவுகோல்களின்படி பாகிஸ்தானின் கால்பந்து அரசியலமைப்பை திருத்தத் தவறியதே இந்தத் தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் முக்கிய காரணியாக உள்ளது. ஜூன் 2019 முதல், பாகிஸ்தான் கால்பந்து FIFA ஆல் நியமிக்கப்பட்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் கால்பந்து சம்மேளனம் அவர்களின் பரிந்துரைகளின்படி…
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்-ஸ்ரீதரன்
மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் 08 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது இனவாதக் கருத்தல்ல என சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டம் சமனானது எனக் கூறும் இன்றைய அரசு தனது நிலைப்பட்டில் இருந்து படிப்படியாக மாறி தனது சுய நிலைக்கு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.…
-
யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (08) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகமும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கூறினார். அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல்…
-
இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம்!
அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அந்த நிறுவனம் நாட்டில் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதன்படி, சீனாவின் சினோபெக் நிறுவனம், அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ், மற்றும் அவஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனங்கள் நாட்டில் செயல்பாடுகளைத் தொடங்கியது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நாட்டில் தலா 150 எரிபொருள் நிலையங்கள் என்ற வகையில் 450 எரிபொருள் நிலையங்களை…
-
ஒரு வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஓநாய்கள் சுட்டுக் கொலை!
சுவிட்சர்லாந்தில் ஒரு வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஓநாய்கள் சுட்டுக் கொலை சுவிட்சர்லாந்தில் ஓநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவே உள்ளது. பிப்ரவரி 1, 2024 முதல் ஜனவரி 2025 இறுதி வரை சுவிஸ் வேட்டைக்காரர்கள் சுமார் 101 ஓநாய்களைக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் 6 ஓநாய்கள் விபத்துக்கள் அல்லது இயற்கை காரணங்களால் இறந்துள்ளன. பிராந்திய கொலைகள் மற்றும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுதல் சுவிட்சர்லாந்தில் வேட்டையாடுபவர்களைக் கண்காணிக்கும் KORA அறக்கட்டளையின்படி, பெரும்பாலான கொலைகள் Graubünden (47 ஓநாய்கள்)…
-
ட்ரம்பின் அச்சுறுத்தல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாகக் கூறும் ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மையானதுதான் என்று கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்திவரும் விடயம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ட்ரம்பின் அச்சுறுத்தல் உண்மையானதுதான், அதாவது, ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக சும்மா சொல்லவில்லை என்கிறார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ. பழங்காலத்தில் வலிமையான மன்னர்கள் மற்ற நாடுகளைப் பிடிக்கும் ஆசையுடன் போருக்குப் புறப்பட்டதுபோல, அல்லது கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தானியா பல நாடுகளை…
-
அனுர அரசுக்கு எதிரான கண்டனம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை ஆளும் தரப்பே இல்லாதொழித்துள்ளது என்றும், நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியள்ளார்.மேலும், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மூடப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், எளிமையாக செயற்படுகிறோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய…
-
மலையகத்தில் நாங்கள் 70, 80 ஆண்டுகள் இருந்ததினால் தான் மலையக மக்கள் இன்றும் இருகின்றார்கள் – ஜீவன்
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதிய நீதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய தினம் (07) பாராளுமன்றத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,2024 ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கனிசமான நிதி ஓதுக்கீடானது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பெருந்தோட்ட மக்களுக்கு மட்டும் வீடமைப்பு, வைத்தியசாலைகள் ,பாடசாலைகள், வீதிகள் அபிவிருத்தி ஆகியன தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின்…
-
கோபமாகி ஷூட்டிங்கை திடீரென ரத்து செய்துவிட்ட Rj பாலாஜி!
சூர்யாவின் முந்தைய படமான கங்குவா பெரிய தோல்வி அடைந்த நிலையில் அவரது அடுத்த படங்கள் மீது தான் பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ரெட்ரோ படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கும் காமெடி நடிகர் கோதண்டம்…