Author: Menaka Mookandi
-
2025 வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் IMF நிபந்தனை
இந்த ஆண்டுக்கான (2025) வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதுடன், மார்ச் மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதுஈ சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக்…
-
நீர் விநியோகமும் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும், உடனடியாக மின்சாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
லிட்ரோ திருத்தம் நிதியமைச்சு மௌனம்
பெப்ரவரி மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தை எரிவாயு விலைக்கேற்ப நாட்டின் எரிவாயு விலைகள் மாதந்தோறும் திருத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படும் இருப்பினும், பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. உலக சந்தையில் எரிவாயு விலை…
-
மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கம் – சஜித் குற்றச்சாட்டு
இன்று நாட்டில் மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே காணப்படுகின்றது. மலிவு விலையில் தேங்காய் அரிசி மற்றும் உப்பு வாங்க முடியாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முடியாத அரசு எவ்வாறு மக்களை வாழ வைக்கப்போகிறது என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைத் தருவதாக கூறினர், ஆனால் இன்று அவர்கள் வயல்வெளிகளுக்குச் சென்று விவசாயியை சந்திப்பதற்கே பயப்படுகின்றனர். இவ்வாறான பொய்களை…
-
மின் தடையால் ரயில் போக்குவரத்தும் பாதிப்பு!
நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, ரயில்வே கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயல்பாட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், ரயில் குறுக்கு வீதிகளின் பாதுகாப்பு கடவைகளை செயற்படுத்துவதிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மின் தடை காரணமாக ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
போலீசாரிடம் இருந்து தப்பியோடிய இத்தாலிய குடிமகன் கைது..!!
போலீசாரிடம் இருந்து தப்பியோடிய இத்தாலிய குடிமகன் கைது..!! போலீசார் நிறுத்த முற்பட்ட வேளையில் நிறுத்தாமல் தப்பியோடிய ஓட்டுனர் ஒருவர் தற்போது பிடிபட்டுள்ளதாக வாட் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர். ஜனவரி 27, 2025 திங்கட்கிழமை, மாலை 5:50 மணியளவில், வாட் கன்டோன் (Aigle) ஐகிளில் உள்ள சாப்லாய்ஸ் காவல்துறையினரால் ஒரு ஓட்டுநர் நிறுத்தப்படவிருந்தார். இருப்பினும், ஓட்டுநர் காவல்துறையினரின் தடையை மீறி சோதனையைத் தவிர்க்க முயன்று நிறுத்தாமல் தப்பிச்சென்றார். இதனால் பல வாகனங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டது, இதில் ஒரு…
-
போலி போக்குவரத்து டிக்கெட்டுகள் மூலம் மோசடி முயற்சிகள்
போலி போக்குவரத்து டிக்கெட்டுகள் மூலம் மோசடி முயற்சிகள் சமீப வாரங்களில் போலி போக்குவரத்து டிக்கெட்டுகள் மூலம் மோசடி முயற்சிகள் அதிகரித்து வருவதாக ஜெனீவா கன்டோனல் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. மோசடி செய்பவர்கள், பெறுநர்களிடம் கூறப்படும் அபராதம் செலுத்துமாறு கேட்டு ஏமாற்றும் வகையில் உண்மையான மின்னஞ்சல்களை அனுப்புகின்றனர். இந்த மோசடி செய்திகள் பெரும்பாலும் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளன, இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் பார்வையில் மோசடியை அடையாளம் காண்பது கடினம். மோசடி எவ்வாறு செயல்படுகிறது? மோசடி செய்பவர்கள்…
-
மின்சார விநியோகத்தை மீளமைக்க சில மணித்தியாலங்கள் எடுக்கும்
மின்சார விநியோகத்தை முழுமையாக மீளமைக்க சில மணித்தியாலங்கள் எடுக்கும் – பொறுமையாக இருக்குமாறு வேண்டுகோள்… நாடளாவிய ரீதியில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இலங்கை மின்சார சபை (CEB) இந்தப் பிரச்சினையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், மின்சாரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த இடையூறுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறார்கள். எவ்வாறாயினும், மின்சார விநியோகத்தை முழுமையாக…
-
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு
கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளார். மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரி வீதி சோதனை நடவடிக்கைக்கு சமூகமளிக்காததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது கையடக்க தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து…
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திககள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரீபியன் கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரீபியன் கடலை அண்மித்த தீவுகள் மற்றும் நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை…